நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.ஏனென்றால்,நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும்.மேலும் நிச்சயமாக நன்மை…

நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.ஏனென்றால்,நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும்.மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும்

"நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.ஏனென்றால் நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும்.மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் மேலும் மனிதன் உண்மை பேசிக் கொண்டும் உண்மையைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அவன் அல்லாஹ்விடம் உண்மையாளன் என்று எழுதப்படுவான்.நீங்கள் பொய் சொல்வதையிட்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் நிச்சயமாகப் பொய் தீமைக்கு வழிகாட்டும். மேலும் நிச்சயமாக தீமை நரகிற்கு வழிகாட்டும்.எனவே மனிதன் பொய் பேசிக் கொண்டும் பொய்யைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அல்லாஹ்விடம் அவன் பொய்யன் என்று எழுதப்படுவான்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஹதீஸ் விளக்கம்:எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும்,மேலும் அதனைத் தேட வேண்டும்.என்று நபியவர்கள் மக்களைத் தூண்டினார்கள்.மேலும் அதன் பலன் யாது,இம்மையிலும் மறுமையிலும் பாராட்டத் தக்க அதன் பெறுபேறு என்னவென்பதையும் நபியவர்கள் தெளிவு படுத்தினார்கள்.ஏனெனில் உண்மையே சுவர்கத்திற்கு வழிகாட்டும் அடிப்படையான நற்கருமமாகும்.எனவே மனிதன் எப்பொழுதும் உண்மையைக் கடைப்பிடித்து வரும் போது அவர் ஸித்தீக்கீன்கள்-எனும் உண்மையாளர்களுடன் இருப்பார் என அல்லாஹ்விடம் பதியப்படுவார்.இதுட அவரின் முடிவு நல்லதாகவும்.அவரின் இறுதிப் பெறுபேறு அச்சமற்றதாகவும் இருக்கும் என்பதை உணர்த்துகின்றது. மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பொய் பேசுவதை எச்சரிக்கை செய்தார்கள்.அத்துடன் அதன் தீமையையும். அதன் தீய பெறுபேற்றையும் எடுத்துக் காட்டினார்கள். ஏனெனில் நரகிற்குச் செல்லும் பாதையின் அடிப்படை தீமை அந்தப் பொய்யே.

التصنيفات

நற்குணங்கள்