வெட்கம் ஈமானைச் சார்ந்தது

வெட்கம் ஈமானைச் சார்ந்தது

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் தனது சகோதரருக்கு வெட்கம் குறித்து உபதேசம் செய்து கொண்டிருப்பதை செவிமடுத்தார்கள், அப்போது நபியவர்கள் ' வெட்கம் ஈமானைச் சார்ந்தது என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஒரு மனிதர் தனது சகோதரனுக்கு அதிகம் வெட்கப்படுவதை விட்விடுமாறு உபதேசிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செவி மடுத்தார்கள், அதற்கு நபியவர்கள் வெட்கம் ஈமானைச் சார்ந்தது அது நன்மையை மாத்திரமே கொண்டுவரும் என அவருக்கு தெளிவுபடுத்தினார்கள். வெட்கம் ஒரு இயல்பண்பாகும், அது நல்லதைச் செய்யவும், அசிங்கமான அருவருக்கத்தக்க விடயங்களை தவிர்ந்து கொள்ளவும் மனிதனைத் தூண்டுகிறது.

فوائد الحديث

உம்மை நன்மையான காரியங்களை செய்வதை விட்டு தடுப்பவை வெட்கம் என்ற பெயரால் அழைக்கப் படமாட்டாது, மாறாக அது இயலாமை, கோளைத்தனம் போன்ற பெயரால் அழைக்கப்படும்.

அல்லாஹ்வின் விடயத்தில் வெட்கப்படுதல் என்பது அவனின் கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடைசெய்தவற்றை விட்டுவிடுவதைக் குறிக்கும்.

மனிதர்களுடன் நாணம் பேணல் என்பது அவர்களை கௌரவப்டுத்துவதும், அவர்களுக்குரிய அந்தஸ்த்தை வழங்குவதும், வழமையில் அசிங்கமாக கருதப்படுபவற்றிலிருந்து விலகி நடப்பதையுமே குறிக்கும்.

التصنيفات

நற்குணங்கள்