إعدادات العرض
நபியவர்கள் கெட்டவராகவோ, கெட்டவார்த்தைகள் பேசுபவராகவோ, சந்தைகளில் சப்தமிட்டுக் கொண்டிருப்பவராகவோ…
நபியவர்கள் கெட்டவராகவோ, கெட்டவார்த்தைகள் பேசுபவராகவோ, சந்தைகளில் சப்தமிட்டுக் கொண்டிருப்பவராகவோ இருக்கவில்லை. ஒரு தீமைக்குக் கூலியாக இன்னொரு தீமையை செய்ய மாட்டார்கள். மாறாக மன்னித்து, புறக்கணித்து விடுவார்கள்
அபூ அப்துல்லாஹ் அல்ஜதலீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் ஆஇஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களது குணங்களைப் பற்றிக் கேட்டபோது, அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நபியவர்கள் கெட்டவராகவோ, கெட்டவார்த்தைகள் பேசுபவராகவோ, சந்தைகளில் சப்தமிட்டுக் கொண்டிருப்பவராகவோ இருக்கவில்லை. ஒரு தீமைக்குக் கூலியாக இன்னொரு தீமையை செய்ய மாட்டார்கள். மாறாக மன்னித்து, புறக்கணித்து விடுவார்கள்.
الترجمة
العربية Bosanski English فارسی Français Русский 中文 हिन्दी Indonesia اردو Hausa Kurdî Tiếng Việt অসমীয়া Nederlands Kiswahili සිංහල ગુજરાતી Magyar ქართული Română Português ไทย తెలుగు मराठी دری Türkçe አማርኛ বাংলা Malagasy Македонски Tagalog ភាសាខ្មែរ Українська ਪੰਜਾਬੀ Wolof پښتو Moore Svenska മലയാളംالشرح
உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களது நற்குணங்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது அவர்கள், நபியவர்களது இயல்பிலேயே சொற்களிலோ, செயற்களிலோ அசிங்கமாக, கெட்ட விதமாக நடந்துகொள்பவராக இருக்கவில்லை எனவும், வேண்டுமென்றே சிரமப்பட்டு அவ்வாறு நடந்து கொள்பவராக இருக்கவில்லை எனவும் சந்தைகளில் சப்தங்களை உயர்த்திப் பேசுபவராக இருக்கவில்லை எனவும், ஒரு தீமைக்குக் கூலியாக இன்னொரு தீமையை செய்யமாட்டார்கள் எனவும், மாறாக உள்ளத்தால் மன்னித்து, வெளிப்படையில் புறக்கணித்து விடுவார்கள் எனவும் கூறுகின்றார்கள்.فوائد الحديث
நபயிவர்களிடம் காணப்பட்ட உயர்குணங்கள் மற்றும் அவர்கள் இழிகுணங்களில் இருந்து தூரமாக இருந்தமை ஆகியவற்றைத் தெளிவுபடுத்தல்.
நற்குணங்களைக் கடைப்பிடிக்கவும், தீயகுணங்களைத் தவிர்க்கவும் ஆர்வமூட்டல்.
அறுவறுப்பான வார்த்தைகள், இழிவான பேச்சுக்கள் ஆகியவற்றைப் பேசுவதைக் கண்டித்தல்.
மக்கள் மீது குரலை உயர்த்தி, சப்தமிடுவதை எச்சரித்தல்.
தீமையை, நன்மையைக் கொண்டு எதிர் கொள்ளுமாறும், மன்னித்து, விட்டுவிடுமாறும் ஆர்வமூட்டல்.
