'இலகு படுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள், சுபசோபனம் கூறுங்கள்; (நல்லவற்றையே கூறுங்கள்) வெறுப்படையச்…

'இலகு படுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள், சுபசோபனம் கூறுங்கள்; (நல்லவற்றையே கூறுங்கள்) வெறுப்படையச் செய்யாதீர்கள்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'இலகு படுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள், சுபசோபனம் கூறுங்கள்; (நல்லவற்றையே கூறுங்கள்) வெறுப்படையச் செய்யாதீர்கள்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இம்மை மறுமை விடயங்களில் மக்களுக்கு இலகு படுத்துமாறும் சிரமப்படுத்தாதிருக்குமாறும் கட்டளையிடுகிறார்கள். இலகு படுத்தலும் சிரமப்படுத்தலும் அல்லாஹ் அனுமதித்த மார்க்கமாக்கிய வரம்புகளுக்குள் இருத்தல் வேண்டும். அவர்களை வெறுக்கச் செய்யாது, நன்மையான வற்றைக் கொண்டு நற்செய்தி கூறுமாறும் ஆர்வமூட்டுகிறார்கள்.

فوائد الحديث

மக்களிடம் அல்லாஹ்வின் நேசத்தை ஏற்படுத்தி, நன்மையை ஊக்குவிப்பதே ஒரு முஃமினின் கடமையாகும்.

இஸ்லாமிய அழைப்புப் பணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முறையை மதிநுட்பத்துடன் ஆராய்வது அழைப்பாளிக்கு அவசியமாகும்.

நற்செய்தி கூறுதல் மகிழ்ச்சி, மற்றும் ஆர்வத்தைத் தோற்றுவிப்பதுடன், அழைப்பாளருக்கும், அவர் மக்களுக்கு முன்வைக்கும் விடயங்களிலும் ஒரு வித அமைதி ஏற்படுத்துகின்றது.

சிரமப் படுத்தல் வெறுப்பு, பின்வாங்கல், அழைப்பாளரின் பேச்சில் சந்தேகம் போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றது.

அடியார்கள் மீதான அல்லாஹ்வின் அருள் விசாலமானது, அவனே அவர்களுக்கான சிறப்பான மார்க்கத்தையும், இலகுவான சட்டதிட்டங்களையும் பொருந்திக் கொண்டுள்ளான்.

இங்கு இலகுபடுத்துதல் என குறிப்பிடுவது இஸ்லாமிய மார்க்கம் கொண்டு வந்த அனுமதித்த விடயங்களாகும்.

التصنيفات

நற்குணங்கள்