'(பிறரை)அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல. உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்…

'(பிறரை)அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல. உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: '(பிறரை)அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல. உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

உண்மையான வலிமை என்பது உடல் வலிமையோ, அல்லது பலசாலியை வீழ்த்துவதோ அல்ல. மாறாக மிகப்பெரும் பலசாலி என்பவன் கடுமையான கோபத்தின் போது தனது உள்ளத்துடன் போராடி கட்டுப்படுத்துபவனே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். ஏனெனில் இது தன்னைக் கட்டுப்படுத்தி அவனிடமுள்ள ஷைத்தானை வெற்றி கொள்ளும் அவனது ஆற்றலைப் பறைசாற்றுகின்றது.

فوائد الحديث

கோபத்தின் போது மனதை அடக்குதல் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் சிறப்பு குறித்து குறிப்பிடப்பட்டிருத்தல். இவை இஸ்லாம் ஆர்வமூட்டியுள்ள நல்லமல்களில் சிலதாகும்.

கோபத்தின் போது மனதுடன் போராடுவது எதிரியுடன் போராடுவதை விட மிகவும் சிரமானது.

வலிமை பற்றிய அறியாமைக் கால எண்ணக்கருவை இஸ்லாம் ஒரு தனித்துவமான முஸ்லிம் ஆளுமையை உருவாக்கும் கண்ணியமான பண்பாக மாற்றியுள்ளது. எனவே மக்களில் மிகவும் வலிமையானவர் தனது மனதை கட்டுப்படுத்தி ஆள்பவராவார்.

தனிமனித மற்றும் சமூகவியல் ரீதியான பல தீங்குகளுக்கு கோபம் வழிவகுப்பதால் அதனை விட்டும் விலகியிருப்பது அவசியமாகும்.

التصنيفات

நற்குணங்கள்