யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்.

யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்.

"யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்".என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

எல்லா காரியங்களையும் மிருதுவாக,மென்மையாக மேற்கொள்ள வேண்டுமென்பதை இந்த ஹதீஸ் தூண்டுகிறது.எனவே எவர் வன்மையுடனும், கடுமையாகவும் நடந்து கொள்வாரோ அவர் தான் செய்த காரியத்தின் பலனை இழந்து விடுவார் என்பதையும் இது அறிவிக்கின்றது.

التصنيفات

நற்குணங்கள்