இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட 'நஜ்ரான்' நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான்…

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட 'நஜ்ரான்' நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசி ஒருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார் எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, 'முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளை இடுங்கள்' என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அனஸ் (ரழி) அவர்களின் செய்தியில் அவர் குறிப்பிடுகையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சால்வையொன்றை போர்த்திருந்த நிலையில் நான் அவருடன் சென்று கொண்டிருந்தேன். அன்னிஹாயா பீ கரீபில் ஹதீஸில் குறிப்பிடப்பட்டது போன்று 'புர்துன்' என்பதன் கருத்து கோடிடப்பட்ட ஆடை - பிடவை என்பது பொருளாகும் நஜ்ரானீ என்பது யமன் நாட்டிலுள்ள ஒரு பிரதேசமாகும் (ஹாஷியா என்பதன் கருத்து ஒரம் என்பதாகும். 'பஅத்ரகஹூ அஃராபிய்யுன் மின்வராஇஹி' என்பதன் அர்த்தம் அவரைப் பின் தொடர்ந்தார் என்பதாகும். 'ஜபத' என்பதன் கருத்து இழுத்தான் என்பதாகும் அனஸ் ரழி கூறுகிறார்கள், நாட்டுப்புற அரபி அவரின் கழுத்தை இழுத்ததனால் அவர் முழுமையாகத் திரும்பி அவனைப் பார்த்தார் என்பது கருத்தாகும்.அத்துடன் இவ்வாறு அவரைத் திரும்பிப் பார்த்த விடயமானது அந்த நாட்டுப்புற அரபி அவருடன் மோசமான முறையில் நடந்துகொன்டாலும் அவரில் எவ்வித மாற்றமும் தென்படவில்லை என்பதைச் சொல்கிறது. 'ஸப்ஹது ஆதிகி ரஸுலில்லாஹ' என்பது தோளின் ஒரு பகுதி என்பது பொருளாகும்' அவன் கடுமையாக இழுத்ததன் விளைவாக அவரின் தோள்பட்டையில் கீரலை ஏற்படுத்தியது என்ற விடயத்தில் அல்லாஹ் நாட்டுப்புற அரபுகள் குறித்துப் பேசிய வசனம் உண்மையாகும்.அல்லாஹ் குறிப்பிடும் போது 'இந்த நாட்டுப்புற அரபிகள் இறைநிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகவும் கடுமையானவர்கள்.மேலும் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது இறக்கியருளிய மார்க்கத்தின் வரையறைகளை அறிவதிலும், தொடர்ந்தும் அந்நாட்டுப்புற அரபி பேசும் போது முஹம்மதே! என நபிகளின் பெயரை விழித்துப் பேசினார். இதிலிருந்து விளங்குவது யாதெனில் அவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவராக இருந்திருக்க முடியும் அதனால்தான் பாசத்தின் கடலான நபியவர்களுடன் அவ்வாறு கடுமையாக நடந்து கொண்டார். எனக்கு தருமாறு ஆணையிடுயுங்கள் (முர்லி) என்பதன் கருத்து உமது தோழர்களிடம் எனக்கு தருமாறு கட்டளையிடுங்கள். 'மின் மாலில்லாஹி அல்லதி இன்தக' என்பதன் கருத்து உனது சொந்த பொருளிலிருந்து அல்ல என்பதாகும். இந்த கருத்து வேறொரு அறிவிப்பில் தெளிவாக வந்துள்ளது. உனது சொத்தோ உன்னுடைய தந்தையுடைய சொத்தோ அல்ல என இடம் பெற்றுள்ளது. அதாவது இதன் கருத்து ஸகாத் என்பதாகும். காரணம் ஸகாத்தில் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோருக்கு வழங்கப்படுவதினாலாகும். 'பல்தபத இலைஹி ரஸூலுல்லாஹ் (ஸல்)' என்பது நபி (ஸல்) அவரை ஆச்சரியத்தோடு நோக்கினார் என்பது பொருள். பின்பு அவரின் மீதுள்ள கருணையால் சிரித்து விட்டு அவருக்கு நன்கொடை வழங்கி உதவி செய்யுமாறு ஸஹாபாக்களுக்குக் கட்டளைப் பிரப்பித்தார்கள்.

التصنيفات

நற்குணங்கள், நாட்டுத் தலைவரின் கடமைகள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மென்மை