நற் கருமம் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்

நற் கருமம் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்

தங்களின் வீட்டு வாயலில் இருவர் சத்தமிட்டு சர்சை செய்து கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருவர் மற்றவரிடம் தனது பலுவைக் குறைத்து தன் மீது கருணை காட்டு மாறு வேண்டினார்.அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றார்.அவ்வமயம் அவர்களிடம் நபியவர்கள் வந்து "நன்மை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்?" என்றார்கள்.அதற்கு அவர் "அல்லாஹ்வின் தூதரே! நான்தான்.எனினும் அவர் எதனை விரும்பினாரோ அது அவருக்குரியதே" என்றார்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்களின் வீட்டு வாயலில் இருவர் நின்று கொண்டு சண்டையிட்டுத் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர்.அது நபிகளாரின் காதில் வீழ்ந்தது.அந்த ஒலியை நன்கு செவிமடுத்த நபியவர்கள்,இருவரில் ஒருவர் தனது பலுவைக் குறைக்கும் படியும்,தன்னுடைய விடயத்தில் கருணை காட்டு மாறும் வேண்டிக் கொண்டிருந்தார்.அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக அதை நான் செய்ய மாட்டேன் என்றார்.அப்பொழுது அவர்களிடம் நபியவர்கள் வந்து"நன்மை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்?"என்றார்கள்.அதற்கு அவர்"அல்லாஹ்வின் தூதரே! நான்தான்.எனினும் அவர் எதனை விரும்பினாரோ அது அவருக்குரியதே" என்றார்.அதாவது நான்தான் சத்தியம் பண்ணினேன்.எனினும் என்னுடன் தர்க்கம் போட்டுக் கொண்டவர் அவர் கடன் பட்டதிலிருந்து எதனை நான் தள்ளுபடி செய்ய வேண்டு மென அவர் விரும்புகிறாரோ அது,அல்லது எந்த விடயத்தில் அவருக்குக் கருணை வேண்டு மென்று விரும்புகின்றாரோ அது அவருக்குண்டு.என்று கூறினார்.மேலும் "அவர்கள் எதனைக் குறைக்க விரும்புகின்றனரோ அதனையும் இன்னும் மூலதணத்திலிருந்து எதயேனும் நான் தள்ளுபடி செய்ய வேண்டுமென தாங்கள் நினைத்தால் அதனையும் நான் தள்ளுபடி செய்து விடுகிறேன் என்று அவர் கூறினார்.பின்னர் அவர்கள் எதனைக் குறைக்க விரும்பினரோ அதனை அவர் தள்ளுபடி செய்தார்"என அஹ்மதிலும்,இப்னு ஹிப்பானிலும் பதிவாகியுள்ளது.(அஹ்மத் (24405) (இப் ஹிப்பான் (5032).இந்த ஹதீஸை இந்த பாடத்தின் கீழ் கொண்டு வரக் காரணம் கடன் தொகையைக் குறைக்கச் செய்வதன் மூலமோ அல்லது அதில் ஏதேனும் சலுகையைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமோ அந்த வழக்காளிகள் இருவருக்கும் மத்தியில் ரஸூல் (ஸல்) அவர்கள் நல்லினக்கத்தை ஏற்படுத்த முயன்றார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதே.மேலும் இது போன்றதோர் சம்பவம் புஹாரியிலும் (2424) முஸ்லிமிலும் (1558) பதிவாகியுள்ளது.கஃப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்ரத் அல்அஸ்லமீ என்பார் அடமிருந்து கடன் வாங்கியிருந்தார்.என்றும்,எனவே அவரிடம் அவர் பெற்ற கடனைக் கேட்ட போது தம் மத்தியில் பேச்சு ஆரம்பித்து,இருவரினதும் சப்தம் உயர்ந்துவிட்டது.அவ்வமயம் ரஸூல் (ஸல்) அவர்கள் தங்கள் இருவரையும் தாண்டிச் செல்லுகையில் அன்னார் பாதி என்பதை எடுத்துக் காட்டுவது போன்று தங்களின் கரத்தால் ஜாடை செய்து"கஃபே !" என்றார்கள்.அப்பொழுது தனக்கு அவரிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகையிலிருந்து பாதியைத் தான் எடுத்துக் கொண்டு மறு பாதியைத் தான் விட்டு விட்டதாகவும்.அவர் குறிப்பிட்டார்.எனவே நல்ல கருமங்கள் செய்யும் விடயத்தில் சகல முஸ்லிம்களும் ஆர்வம் காட்டுவது அவசியமாகும்.எனவே மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் அதில் ஒன்றே.எனவே இருவருக்கு அல்லது இரண்டு குழுக்களுக்கு அல்லது இரண்டு கோத்திரத்திற்கு மத்தியில் பிணக்கு,பிரிவிணை,கோப தாபம்,சண்டை சச்சரவு எதையேனும் கண்டால்,அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்தும் படியான காரியங்களை நீக்கி அவ்விடத்தில் சகோதரத்துவத்தையும்,பாசத்தையும் உண்டு பண்ண முயற்சித்தல் வேண்டும்.ஏனெனில் இதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.இன்னும் சொல்வதாயின் அது நோன்பாளியினதும்,இரவில் நின்று வணங்குபவனினதும்,தாணதர்மம் வழங்குபவனினதும் அந்தஸ்தைப் பார்க்கிலும் சிறந்ததாகும்.ஏனெனில் "நோன்பு,தொழுகை,தர்மம் என்பவற்றின் அந்தஸ்த்தைப் பார்க்கிலும் சிறந்த விடயம் ஒன்றை உங்களுக்கு அறியத் தரட்டுமா?" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.அதற்கு தோழர்கள் " அல்லாஹ்வின் தூதரே! ஆம்" என்றனர்.அப்பொழுது நபியவர்கள் "முரன் பட்டவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்" என்றார்கள்.இதனை அபூ தாவுத் அறிவித்துள்ளார்கள்.(அபூ தாவுத்,4919) மேலும் அஷ்ஷைக் அல்பானீ அவர்கள் இதனை ஸஹீஹ் அபூ தாவுதில் சரிகண்டுள்ளார்கள்.(இலக்கம் 49109)

التصنيفات

நற்குணங்கள்