நிச்சயமாக அல்லாஹ், செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொன்றால், நன்றாகக்…

நிச்சயமாக அல்லாஹ், செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொன்றால், நன்றாகக் கொல்லுங்கள். நீங்கள் அறுத்தால் நன்றாக அறுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தங்களது கத்தியை கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்குங்கள் (குறையுங்கள்).

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ், அனைத்தையும் செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொன்றால், நன்றாகக் கொல்லுங்கள். நீங்கள் அறுத்தால் நன்றாக அறுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தங்களது கத்தியை கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்குங்கள் (குறையுங்கள்).

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஒரு முஸ்லிம் தனது எண்ணம், உள்ரங்கத்தை திருத்தும் படி பணிக்கப்பட்டுள்ளான், தனது கட்டுப்படல், வணக்கத்தை திருந்தச் செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளான், தனது பணி, தொழிலைத் திருந்தச் செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளான், மனிதர்கள்,பிராணிகள் உட்பட, உயிரற்ற பொருட்களுக்குக் கூட உபகாரம் செய்யும் படி பணிக்கப்பட்டுள்ளான். பிராணியை அறுக்கும் போது அதனை அறுப்பதே ஒரு நோவினை என்பதில் ஐயமில்லை, பயன்பாட்டிற்காக அறுப்பதும் அவசியமானதுதான். அவ்வாறெனின் இந்த ஏவலின் நோக்கம் கருணை, இரக்கம், மென்மை போன்றவற்றை சட்டபூர்வமாக அறுக்கும் போது, கொலை செய்யும் போது கூட விசுவாசியின் உள்ளத்தில் இருக்க வேண்டுமென்பதைப் பயிற்றுவிப்பதும், அச்சந்தர்ப்பங்களில் அவற்றை விட்டும் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்பதற்காகவே. அறுக்கும் போது,(கொல்லும் போது) திருந்தச் செய்ய வேண்டுமெனின் ஏனைய செயல்களில் இது இன்னும் கடுமையாக வலியுறுத்தப்படுகின்றது என்பதையும் இது உணர்த்துகின்றது. கத்தியைக் கூர்மைப்படுத்திக் கொள்வது, பிராணியின் கஷ்டத்தை எளிமையாக்குவதும் திருந்தச் செய்வதிலும் உள்ளதாகும்.

فوائد الحديث

இந்த நபிமொழி அனைத்திலும் இஹ்ஸான் (உபகாரம், நலவு செய்தல், திருந்தச் செய்தல்) அவசியம் என்பதை அறிவிக்கின்றது. எனினும் ஒவ்வொன்றிற்கும் அதன் நிலைக்கேற்பவே இஹ்ஸான் அமையும். உள்ரங்கமான வெளிப்படையான கடமைகளைச் திருந்தச் செய்தல் என்பது அதனை அழகாக முழுமையாக நிறைவேற்றுவதாகும். இது அவசியமான அளவாகும். இதில் ஸுன்னத்தான விடயங்களையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் அழகாக்குவது விரும்பத்தக்கது. தடுக்கப்பட்டவற்றை விடுவதில் இஹ்ஸான் என்பது அக, புற ரீதியில் அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்வதாகும். இது அவசியமான அளவாகும். சோதனைகளின் போது செய்யும் பொறுமையில் இஹ்ஸான் என்பது அதனை வெறுக்காமல், பொறுமையிழந்து ஏதும் பேசிவிடாமல் முழுமையாகப் பொறுமை காக்க வேண்டும். படைப்பினங்களுடன் நடந்து கொள்ளும் முறையில் இஹ்ஸான் என்பது அவற்றில் அல்லாஹ் கடமையாக்கியுள்ள உரிமைகளை முறையாக செலுத்துவதாகும். படைப்பினங்களை ஆளும் போது கடைபிடிக்க வேண்டிய இஹ்ஸான் என்பது அவர்களுக்குரிய உரிமைகளை முறையாக செலுத்துவதாகும். கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட பிராணிகளைக் கொல்வதில் இஹ்ஸான் என்பது அதிக சித்திரவதை செய்யாமல் இலகுவாகவும் மிக வேகமாகவும் அவற்றின் உயிர்களைப் போக்குவதாகும். சித்திரவதை அவசியமற்ற நோவினையாகும்.

அல்லாஹ் தனது அடியார்கள் மீது இரக்கம் கொண்டு, அவர்களுக்கு அனைத்திலும் நலவு, உபகாரம், திருந்தச் செய்வதைக் கடமையாக்கியுள்ளான்.

அல்லாஹ்வுக்கே கட்டளை அதிகாரம், தீர்ப்பு அனைத்தும் உள்ளன என்பதை "நிச்சயமாக அல்லாஹ், செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான்" எனும் வார்த்தையின் மூலம் அறியலாம், அல்லாஹ்வின் ஏவல் இரு வகைப்படும் : உலக விதியின் படி அமைந்த ஏவல், மார்க்க சட்ட திட்டங்களின் படி அமைந்த ஏவல் ஆகியனவாகும்.

இஹ்ஸான் என்பது அனைத்தையும் உள்ளடக்கக் கூடியதாகும், அனைத்திலும் இஹ்ஸான் சாத்தியமாகும். அதனால்தான் நபியவர்கள் "நிச்சயமாக அல்லாஹ், அனைத்தையும் செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான்" எனக் கூறினார்கள்.

நீங்கள் கொலை செய்தால், நீங்கள் அறுத்தால் என உதாரணம் கூறுவதன் மூலம் நபியவர்களின் அழகிய கற்கை முறை தெளிவாகின்றது, ஏனெனில் உதாரணங்கள் கருத்துக்களை விளங்க சமீபமாக்கிக் கொடுக்கின்றது.

கொலை செய்வதிலும் நலவு செய்வது அவசியமாகும், இது கொலை செய்யும் முறைக்கே தவிர, அச் செயலுக்கல்ல.

மார்க்க முறைப்படி அறுப்பதன் மூலம் அச்செயலிலும் இஹ்ஸானைக் கடைபிடித்தல்.

பிராணிகளை அம்பெறியும் இலக்காக எடுத்தல், பட்டினியில் வைத்தல், உணவு, பானங்கள் கொடுக்காமல் தடுத்து வைத்தல் மூலம் சித்திரவதை செய்வது ஹராமாகும்.

இந்த மார்க்கம் அனைத்து நலவுகளையும் உள்ளடக்கியுள்ள பரிபூரண மார்க்கமாகும், பிராணிகளுக்கு இரக்கம் காட்டுதல், அவற்றுடன் மென்மையாக நடந்து கொள்ளல் என்பனவும் இதனைச் சார்ந்ததுதான்.

التصنيفات

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மென்மை, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மென்மை