'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'

'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் அனைத்திலும் தனக்கு விரும்புவதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு விரும்பி தான் வெறுப்பதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு வெறுக்காத வரையில் யாரும் முழுமையான இறைநம்பிக்கையை அடைந்து கொள்ளமாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். எனவே மார்க்க விடயங்களில் தனது சகோதரரிடம் ஒரு குறையை கண்டால் அதனை திருத்துவதற்கு –சீர்செய்ய- அவர் முயற்சி செய்வார். அதே போன்று அவரில் நன்மையான விடயங்களை கண்டால் அவரை நெறிப்படுத்தி அதற்கு உதவிசெய்வதோடு மார்க்க மற்றும் உலக விவகாரங்களில் அவருக்கு அறிவுரை வழங்குவார்.

فوائد الحديث

தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்காகவும் விரும்புவது கடமையாகும் -வாஜிபாகும்-. காரணம் அவ்வாறு விரும்பாத ஒருவருக்கு ஈமான் கிடையாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது இப்பண்பானது ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு விடயம் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.

மார்க்க ரீதியான சகோதரத்துவ உறவானது சாதாரண உறவு முறையை விட உயர்ந்தது. எனவே அதன் உரிமை நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானது.

இந்த நேசத்திற்கு முரணாக அமையும் மோசடி, புறம், பொறாமை மற்றும் முஸ்லிமின் உயிர் அல்லது செல்வம் அல்லது மானம் ஆகியவற்றிற்கு எதிரான அத்துமீறல் போன்ற அனைத்து சொல் மற்றும் செயல் சார்ந்த விடயங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டிருத்தல்.

ஒரு செயலை ஊக்கப்படுத்துவதற்காக சில சொற்களை பாவித்துள்ளமை அவற்றுள்; ' தனது சகோதரனுக்கு' என்ற வார்த்தை இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளமை.

கிர்மானீ ரஹிமஹுல்லா அவர்கள் குறிப்பிடுகையில் : மேலும், தான் வெறுக்கின்ற தீங்கை தனது சகோதரனுக்கும் வெறுப்பதும் ஈமான் சார்ந்த விடயங்களில ஒன்றாகும் என்கிறார். இங்கு இது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் ஒன்றை விரும்புதல் என்பதின் எதிர் கருத்து அதற்கு மாற்றமான ஒன்றை விரும்பாமல் இருப்பது என்பது அந்த வாசகத்தில் உள்ளடங்கியிருப்பதால் அதனைக் குறித்து குறிப்பிடுவதை நபியவர்கள் தவிர்த்துள்ளார்கள்.

التصنيفات

நற்குணங்கள்