பேச முடியாத இந்தக் கால்நடைகள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.எனவே அது நல்ல நிலையில் இருக்கும்…

பேச முடியாத இந்தக் கால்நடைகள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.எனவே அது நல்ல நிலையில் இருக்கும் போது அதில் சவாரி செய்யுங்கள். மேலும் அது நல்ல நிலையில் இருக்கும் போது அதனைப் புசியுங்கள்.

முதுகு வயிற்றுடன் ஒட்டிப் போயிருந்த ஒரு ஒட்டகத்தின் பக்கத்தால் ரஸூல் (ஸல்) அவர்கள் நடந்து சென்ற போது பேச முடியாத இந்தக் கால்நடைகள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.எனவே அது நல்ல நிலையில் இருக்கும் போது அதில் சவாரி செய்யுங்கள். மேலும் அது நல்ல நிலையில் இருக்கும் போது அதனைப் புசியுங்கள்.என்று கூறினார்கள்,என ஸஹ்ல் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

الشرح

ஹதீஸ் விளக்கம்:ஒரு ஒட்டகம் கடும் பசியின் காரணமாக அதன் முதுகு அதன் வயிற்றுடன் ஒட்டிப் போயிருந்தது. அதனைக் கண்ட ரஸூல் (ஸல் அவர்கள் கால்நடைகளுக்கு இரக்கம் காட்டும்படி உத்தரவிட்டார்கள்.மேலும் அதனுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது மனிதனின் கடமை என்றும்,எனவே அதன் சக்திக்கு அப்பால் அதற்கு சிரமம் கொடுக்கவும்,அதன் உணவு,குடிப்பு போன்ற அதன் உரிமையில் குறைபாடு செய்யவும் கூடாது என்றார்கள். மேலும் அதன் மீது சவாரி செய்வதாக இருந்தால் அது நல்ல நிலையில் இருக்கும் போதே அதன் மீது சவாரி செய்ய வேண்டு மென்றும்,அதனை உண்ணுவதென்றால் அது உணவுக்குப் பொருத்தமான நிலையில் இருக்கும் போதே அதனைச் சாப்பிட வேண்டும் என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

التصنيفات

இஸ்லாத்தில் மிருக உரிமைகள்