إعدادات العرض
நடந்தவை நடக்கவிருப்பவை அனைத்தையும் பற்றி (அன்று) எங்களுக்குத் தெரிவித்தார்கள், எங்களில் நன்கறிந்தவர் (அவற்றை)…
நடந்தவை நடக்கவிருப்பவை அனைத்தையும் பற்றி (அன்று) எங்களுக்குத் தெரிவித்தார்கள், எங்களில் நன்கறிந்தவர் (அவற்றை) நன்கு மனனமிட்டவர் ஆவார்
அபூஸைத் அம்ர் இப்னு அக்தப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு "ஃபஜ்ர்" தொழுகை தொழுவித்து விட்டு, சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி எங்களுக்கு உரையாற்றினார்கள். இறுதியில் லுஹர் தொழுகை நேரம் வந்தபோது (மேடையிலிருந்து) இறங்கி, தொழுவித்துவிட்டுப் பிறகு மீண்டும் மேடைமீதேறி "அஸ்ர்" தொழுகைவரை உரையாற்றினார்கள். பிறகு மேடையிலிருந்து இறங்கி (அஸ்ர் தொழுகை) தொழுவித்து விட்டு பிறகு மறுபடியும் மேடைமீதேறி சூரியன் மறையும்வரை உரையாற்றினார்கள்.நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் பற்றி (அன்று) எங்களுக்குத் தெரிவித்தார்கள். எங்களில் நன்கறிந்தவர் (அவற்றை) நன்கு மனனமிட்டவர் ஆவார்
[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහලالشرح
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகையை தொழுதுவிட்டு மின்பருக்கு ஏறி மக்களுக்கு லுஹர் அதான் வரையில் உரை நிகழ்த்தினார்கள்.பின்னர் மின்பரிலிருந்து இறங்கி லுஹர் தொழுதார்கள்.அதை தொடர்ந்து மீண்டும் மிம்பரில் ஏறி அஸர் தொழுகைக்கான அதான் சொல்லும் வரையில் உரையாற்றினார்கள். பின் அஸர் தொழுது விட்டு சூரியன் மறையும் வரையில் உரையாற்றினார்கள் அதாவது ஸூபுஹ் தொழுகை முதல் சூரியன் மறையும் வரையில் முழு நாளும் மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.அத்தினத்தில்தான் முன்னைய சென்ற கால விடயங்கள் பற்றியும்,எதிர்கால மறைவான விடயங்கள் பற்றியும் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்தான். அவைகளை நபி (ஸல்) தமது தோழர்களுக்கு அத்தினத்தில் அறிவித்தார்கள்.நபியவர்கள் கூறியவற்றை மனதில் பதித்து நன்கு மனனம் செய்தவர்கள் தாம் அத்தோழர்களில் மிகவும் அறிந்தவர்கள் ஆவார்கள்