அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக.

அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக.

நபிமார்களில் ஒருரை அவர்களின் சமூகத்தினர் அடித்து அவரின் இரத்தத்தை வடியச் செய்த போது அவர் தன் முகத்தில் வடிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு "அல்லாஹ்வே!என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக""என்று கூறினார்கள். இதனை நமது நபியவர்கள் நமக்கு எடுத்துச்சொல்லும் போது நான் அவர்களின் பக்கம் பார்த்துக் கொண்ருந்தேன். என்று அப்துர்ரஹ்மானின் தந்தை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபிமார்களைச் சேர்ந்த ஒரு நபியை அவரின் சமூகத்தைச் சேர்ந்வர்கள் அடித்தனர்.அப்போது தன் முகத்தில் வடிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொள்ளும் வேளையில் அவர் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.இது அவரின் பொறுமையின் எல்லையை எடுத்துக்காட்டுகின்றது.மேலும் அவர் அத்துடன் நின்று கொள்ளவில்லை.மாறாக அவர்களின் மீது அவர் மிகவும் இரக்கப்பட்டு அவர்கள் உண்மையயை அறியாதவர்கள்,என்று அவர்களின் மீது நியாமமும் கண்டார். இந்த சம்பவத்தை நமது நபிகளார் (ஸல்) அவர்கள் நம்மிடம் எடுத்துக்கூறினார்கள்

التصنيفات

முன்சென்ற இறைத்தூதர்கள்