ஒரு மனிதன் ஒரு பெண்ணை முத்தமிட்டு விட்டார்.எனவே அவர் உடனடியாக ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அதனை…

ஒரு மனிதன் ஒரு பெண்ணை முத்தமிட்டு விட்டார்.எனவே அவர் உடனடியாக ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அதனை தெரியப்படுத்தினார்.அவ்வமயம் "பகலில் இரு முனைகளிலும்,இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தொழுது வாருங்கள்.நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்"எனும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.

" ஒரு மனிதன் ஒரு பெண்ணை முத்தமிட்டு விட்டார்.எனவே அவர் உடனடியாக ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அதனைத் தெரியப்படுத்தினார்.அவ்வமயம் "பகலில் இரு முனைகளிலும்,இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தொழுது வாருங்கள்.நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்"(11:114)எனும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்"அவ்வமயம் அந்த மனிதன்,,அல்லாஹ்வின் தூதரே! இது தனக்குத் தானா? என்றார்.அதற்கு அன்னார் இது எனது உம்மத்தினர் அனைவருக்கும் உரியது,என்றார்கள்.என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

"அபுல் யஸ்ர் என்ற நபித் தோழர் அன்னிய பெண் ஒருவரை முத்தமிட்டுவிட்டார்.பின்னர் தன்னால் நிகழ்ந்த அந்தச் செயலுக்காக அவர் கவலையடைந்தார்.எனவே அவர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து தான் செய்த செயலை எடுத்துக் கூறினார் அவ்வமயம் அவருடைய விவகாரம் தொடர்பாக"பகலில் இரு முனைகளிலும்,இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தொழுது வாருங்கள்.நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்"எனும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான் அது ஸுப்ஹு,ழுஹர்,மேலும் முன்னிரவின் மஃரிப்,இஷா எனும் தொழுகைகளாகும்.அத்துடன் நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்"என்றும் அல்லாஹ் குறிப்பிட்டான்.அதாவது இந்த ஐங்காலத் தொழுகை சிறு பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக அமைகின்றன.நீ செய்ததுவும் அதில் ஒன்றுதான் என்பதை இந்த வசனம் எடுத்துக் காட்டியது.எனவே அந்த மனிதர் இது தனக்குத்தானா?என்றார்.அதாவது இது தனது செயலுக்கு மாத்திரம் குற்றப் பரிகாரமா,அல்லது எல்லா மக்களுக்கும் பொதுவானதா?என்றார்.அதற்கு நபியவர்கள் "எனது சமூகத்தவர் அனைவருக்கும் உரியது" என்றார்கள்.அதாவது இவ்வாறான செயலைப் புரிகின்ற எனது உம்மத்தினர் யாவருக்கும் இந்த ஐங்காலத் தொழுகை குற்றப் பரிகாரமாக அமையும்,என்றார்கள்".மேலும் அபுல் யஸ்ர் அவர்கள் இந்த சம்பவத்தை விரிவாக எடுத்துக் கூறும் போது "ஒரு பெண் என்னிடம் ஈத்தம் பழம் வாங்க வந்ததாள்.அப்பொழுது அவளிடம் "இதைவிட நல்ல ஈத்தம் பழம் வீட்டில் இருக்கின்றது.என்றேன்.எனவே அவளும் என்னுடன் வீட்டுக்குள் வந்தாள்.பின்னர் நான் அவளை நெருங்கி அவளை முத்தமிட்டேன்.பின்னர் நான் அபூ பக்ர் (ரழி) அவர்களிடம் வந்து அதைச் சொன்னேன்.அதற்கு அவர் இது பற்றி யாரிடமும் கூறாதீர்கள்,இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்,மேலும் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள் என்றார்கள்.எனினும் என்னால் பொருமையுடன் இருக்க முடியவில்லை.எனவே நான் உமரிடம் வந்து அவரிடம் இதனைச் சொன்னேன்.அதற்கு அவரும் இது பற்றி யாரிடமும் கூறாதீர்கள்,இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்,மேலும் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள் என்றார்கள்.அப்போதும் என்னால் பொருமையுடன் இருக்க முடியவில்லை.எனவே நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அதனை எடுத்துக் கூறினேன்.அதற்கு நபியவர்கள்,"தன்னை நரகவாதி என்று நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போரில் ஈடுபட்டிருக்கும் போது அவரின் இல்லாளின் விடயத்தில் நீங்கள் நடந்து கொள்வது இப்படித்தானா"? என்றார்கள்.மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் கீழே பார்த்த வண்ணம் நீண்ட நேரம் மௌணமாக இருந்தார்கள்.அவ்மயம் وأقم الصلاة طَرَفَيِ النَّهَار وزُلَفًا مِنَ اللَّيلِஎன்ற வாக்கியம் முதல் ( ذكرى للذاكرين ) என்வறவாக்கியம் வரையிலான வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.என்றும் மேலும் அபூ யஸ்ர் நான் நபியவர்களிடம் வந்த போது ரஸூல் (ஸல்) அவர்கள் அதனை எனக்கு ஓதிக் காண்பித்தார்கள்.அவ்வமயம் அன்னாரின் தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இது இவருக்கு மாத்திரமா,அல்லது எல்லா ஜனங்களுக்கும் பொது வானதா?"என்றனர்.அதற்கு நபியவர்கள் எல்லோருக்கும் பொதுவானது.என்றார்கள்.என அபூ யஸ்ரின் சம்பவத்தை இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் நமக்கு அறிவித்தார்கள் இதனைத் துர்மிதீ அவர்கள் அறிவித்துள்ளார்கள்.(3115) மேலும் அஷ்ஷைக் அல்பானீ அவர்கள் صحيح وضعيف الترمذي என்ற நூலில் இதனை" ஹஸன்" சிறந்த ஹதீஸ் என இனங் காட்டியுள்ளார்கள்.(3115) இன்னொரு ஹதீஸில் "எந்த வொரு முஸ்லிமாயினும் பாவ காரியம் ஒன்றை செய்த பின்னர் இரண்டு ரக்ஆத்துக்கள் தொழுது விட்டு அந்தப் பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவாராகில் அவரை அல்லாஹ் மன்னிக்காமல் இருக்கமாட்டான்,என்று ரஸூல் (அவர்கள் கூறிவிட்டு"எவரேனும் யாதொரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டு பின்னர் அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மிக மன்னிப்பவனாகவும்,நிகரற்ற அன்புடையவனாகவும் அவன் காண்பான்"(4:110) எனும் வசனத்தையும்,"அன்றி அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள்" (3:135) என்ற வசனத்தையும் ஓதினார்கள்,என்று பதிவாகியுள்ளது

التصنيفات

பாவமீட்சி