மனிதரில் சிறந்தவர் நீண்ட ஆயுளைப் பெற்று,நற் கிரியைகள் செய்து வந்தவரே.

மனிதரில் சிறந்தவர் நீண்ட ஆயுளைப் பெற்று,நற் கிரியைகள் செய்து வந்தவரே.

" மனிதரில் சிறந்தவர் நீண்ட ஆயுளைப் பெற்று,நல்ல கிரியைகள் செய்து வந்தவரே"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் அல்அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார் - இதனை தாரமீ பதிவு செய்துள்ளார்]

الشرح

ஹதீஸ் விளக்கம்:நீண்ட ஆயுளைப் பெற்ற ஒரு மனிதன் தன் காலத்தை அல்லாஹ்வின் வழிப்பாட்டில் கழித்து வருங்கால் அவன் அல்லாஹ்வின் நெருக்கத்தை அதிகம் பெறுவான்,ஏனெனில் அடியானின் ஒவ்வொரு நல்லமலும் அவனுக்கு அல்லாஹ்வின் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தித் தரும்.எனவே இவையிரண்டினையும் அடையப் பெற்றவர் மனிதரில் சிறந்தவராக ஆகிவிடுவார்.ஆனால் எவனுடைய ஆயுள் அதிகமாக இருந்த போதிலும் அவனுடைய அமல்கள் நல்லவையாக அமையப் பெறவில்லையோ அது அவனுக்குக் கெட்டதாகவும்,தீமையாகவும் ஆகிவிடும்.எனவேதான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் நல்ல மனிதன் யார்?என்று வினவப்பட்ட போது "நீண்ட ஆயுளும்,நல்லமலும் பெற்றவர்"என்றும்,கெட்ட மனிதன் யார்?என்று வினவப்பட்ட போது"நீண்ட ஆயுளும் தீய செயலும் பெற்றவன்" என்றும் கூறினார்கள்.இதனை அபூ தாவுத்,திர்மிதீ ஆகியோர் அறிவித்துள்ளனர்.மேலும் அல்பானீ அவர்கள்صحيح الترمذي யில் இதனை ஸஹீஹானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்(5/330)இலக்கம் (2330) மேலும் "கால,நேரம் என்பது வியாபாரியின் மூலதணம் போன்றது.அவன் அதனை இலாபம் ஈட்டித் தரும் விடயத்தில் பயன்படுத்துவது அவசியம்.இதன்படி அவனினின் மூலதணம் அதிகரிக்க அதிகரிக்க இலாபமும் அதிகரித்துச் செல்லும்.எனவே எவன் அதனை நல்லவற்றில் பயன்படுத்தி வருவானோ அவன் ஜெயம் பெறுவான்.எவன் தன் மூலதணதனத்தை பாழாக்கி விடுகின்றானோ அவன் இலாபமடைய மாட்டான்.படு நஷ்ட்டமடைவான்" என்று அத்தீபீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்

التصنيفات

நல்லமல்களின் சிறப்புகள்