அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அழும் மனிதன்,பால் அதன் மடிக்குள் திரும்பிச் செல்லும் வரையில் நரகம் செல்ல…

அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அழும் மனிதன்,பால் அதன் மடிக்குள் திரும்பிச் செல்லும் வரையில் நரகம் செல்ல மாட்டான்

அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அழுத மனிதன்،கறந்த பால்அதன்காம்பில் நுழையும் வரையில்,நரகம் செல்ல மாட்டான்.மேலும் அல்லாஹ்வின் பாதையில் (செல்லும் போது) படிந்த புழுதியும்,நரகத்தின் புகையும் ஒன்று சேராது.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

الشرح

அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்பதும்,பாவங்களை விட்டும் விலகி நடப்பதுமே பெரும்பாலும் அல்லாஹ்வின் மீது அச்சம் கொள்ளக் காரணமாக அமைகின்றன. எனவேதான்"அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அழுத மனிதன்,பால் அதன் மடியில் திரும்பிச் செல்லும் வரையில் நரகம் செல்ல மாட்டான்"என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.இது அசாத்தியமான ஒரு விடயத்தை இன்னொரு அசாத்தியமான விடயத்துடன் தொடர்பு படுத்திக் கூறும் வசன முறையைச் சார்ந்ததாகும்.அதாவது எப்படி கரந்த பால் திரும்பவும் அதன் மடியில் போய் சேருவது அசாத்தியமானதோ,அது போன்று அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தின் காரணமாக அழுத ஒரு அடியான் நரகம் செல்வதும் அசாத்தியமானது,என்று நபியவர்கள் இதன் மூலம் எடுத்துக் காட்டினார்கள்.மேலும் இம்மை, மறுமை போன்று பரஸ்பரம் முரண்பட்ட இரண்டு விடயங்கள் எப்படி ஒன்று சேராதோ அது போன்று அல்லாஹ்வின் பாதையில் சென்ற அடியானைத் தொட்ட புழுதியும் நரகத்தின் புகையும் பரஸ்பரம் முரண்பட்ட இரண்டு விடயங்களாகும்.எனவே அவை இரண்டும் ஒன்று சேராது.ஆகையால் அல்லாஹ்வின் பாதையில் கலந்து கொண்ட அடியான் நரகம் செல்ல மாட்டான்,என்பதை ரஸூல் (ஸல்) அவர்கள் இதன் மூலம் தெளிவுபடுத்தினார்கள்.

التصنيفات

போரின் சிறப்பு