அல்லாஹ்வே! நீயே எனக்குப் பக்கபலம்,நீயே எனக்கு உதவி செய்கின்றவன்,உனது உதவியைக் கொண்டே நான் நடமாடுகிறேன்,உனது…

அல்லாஹ்வே! நீயே எனக்குப் பக்கபலம்,நீயே எனக்கு உதவி செய்கின்றவன்,உனது உதவியைக் கொண்டே நான் நடமாடுகிறேன்,உனது உதவியைக் கொண்டே நான் பாய்கின்றேன்.மேலும் உனது உதவியைக் கொண்டே நான் சண்டையிடுகின்றேன்

ரஸூல் (ஸல்) அவர்கள் யுத்தம் செய்யும் போது "அல்லாஹ்வே! நீயே எனக்குப் பக்கபலம்,நீயே எனக்கு உதவி செய்கிறவன்,உனது உதவியைக் கொண்டே நான் நடமாடுகிறேன்,உனது உதவியைக் கொண்டே நான் பாய்கிறேன்.மேலும் உனது உதவியைக் கொண்டே நான் சண்டையிடுகிறேன்"என்று கூறுவார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றர்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]

الشرح

ரஸூல் (ஸல்) அவர்கன் யுத்தம் செய்ய நாடினால்,அல்லது யுத்தம் செய்ய ஆரம்பித்தால் اللهم أنت ناصري ونصيري "அல்லாஹ்வே! நீயே எனக்குப் பக்கபலம்,நீயே எனக்கு உதவி செய்கிறவன்,"என்று கூறுவார்கள்.என்பதன் கருத்தாவது அல்லாஹ்வே! உன் உதவி ஒன்றைக் கொண்டே நான் ஒரு விவகாரத்திலிருந்து இன்னொரு விவகாரத்தின் பக்கம் நகர்கின்றேன்,மேலும் உன் உதவி ஒன்றைக் கொண்டே மார்க்க விரோதிகளின் மீது நான் பாய்கின்றேன்,இன்னும் உதவி ஒன்றைக் கொண்டே நான் அவர்களுடன் யுத்தம் புரிகின்றேன்,என்பதாகும்

التصنيفات

துன்பங்களின் போது ஒத வேண்டிய திக்ருகள்