நீங்கள் மூவர் ஒன்றாக இருக்கும் போது, நீங்கள் இன்னும் மக்கள் கூட்டதில் கலந்து விடாத வரையில் ஒருவரைத் தவிர்த்து…

நீங்கள் மூவர் ஒன்றாக இருக்கும் போது, நீங்கள் இன்னும் மக்கள் கூட்டதில் கலந்து விடாத வரையில் ஒருவரைத் தவிர்த்து இரண்டு பேர்கள் தனியாக இரகசியம் பேச வேண்டாம்,ஏனெனில் இதனால் அவருக்குக் கவலையுண்டாகும்.

"நீங்கள் மூவர் ஒன்றாக இருக்கும் போது, நீங்கள் இன்னும் மக்கள் கூட்டதில் கலந்து விடாத வரையில் ஒருவரைத் தவிர்த்து இரண்டு பேர்கள் தனியாக இரகசியம் பேச வேண்டாம்,ஏனெனில் இதனால் அவருக்குக் கவலையுண்டாகும்." என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

உள்ளங்களை அரவணைத்துச் செல்லும்படியும், சபையில் ஒழுங்காக இருந்து கொள்ளும்படியும்,நல்ல முறையில் உரையாடும்படியும் இஸ்லாம் மார்க்கம் பணிக்கின்றது. மேலும் சக முஸ்லிமுக்கு தீமை விளைவிக்கின்ற,அவனை அச்சுறுத்துகின்ற,அவனுக்கு சந்தேககங்களை உண்டு பண்ணுகின்ற சகல காரியங்களையும் அது தடை செய்கிறது.இப்படியான காரியங்களில் ஒன்றுதான் மூன்று பேர்கள் ஒன்றாக இருக்கும் வேளையில் ஒருவரைத் தவிர்த்து இரண்டு பேர்கள் தனியாகப் பேசிக் கொண்டு செல்வதாகும்.ஏனெனில் இது அவருக்கு தீமையை உண்டு பண்ணும்,அவருக்குக் கவலையைத் தரும்.மேலும் அவர் அவ்விருவருடன் இருக்கத் தகுதியற்றவரோ என்று அவருக்குத் தோன்றச் செய்யும்.அத்துடன் அது அவருக்கு தனிமையையும் உணர்த்தும்.எனவேதான் இத்தகைய இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மார்க்கம் தடை செய்துள்ளது.

التصنيفات

சிறப்புக்களும் ஒழுக்கங்களும், ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்