சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

5- 'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள்.

8- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் 'ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம், நரகம் (இருப்பது) உண்மை தான்' என்றும், (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்'

21- ஹலாலும் (ஆகுமானவை) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்திற்கும், மானத்திற்கும் பாதுகாப்பு எடுத்துக் கொண்டுவிட்டார். அதில் விழுந்தவர் ஹராத்தில் விழுந்து விட்டவராவார்.

45- "ஸுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), "அல்ஹம்து லில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), "லாஇலாஹ இல்லல்லாஹு" (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் பாதகம் எதுவுமில்லை.