'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற…

'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனுக்கு மிகவும் பிரியத்திற்குரியவையுமாகும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனுக்கு மிகவும் பிரியத்திற்குரியவையுமாகும். அவை : 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதன் எந்த சிரமுமின்றி எல்லா வேளைகளிளும் இலகுவாக கூறக்கூடிய இரண்டு வார்த்தைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அவை மீஸானில் வைக்கப்படும் நன்மைகளில் மிகவும் கணதியானதாகவும், அருளாளனான எங்கள் இரட்சகனுக்கு அதி விருப்பத்திற்குரியதாகவும் உள்ளது. அவ்வார்த்தைகள் இரண்டும் பின்வருமாறு : 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'. இவை இரண்டும் அல்லாஹ்வின் மேன்மை, அவனின் பரிபூரணத்துவம், எல்லாவித குறைகளிலிருந்து நீங்கியிருத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

فوائد الحديث

அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தல் அவனைப் புகழ்தல் எனும் இரு விடயங்களையும் ஒன்றிணைத்த மிகப்பெரும் திக்ராக இவை இரண்டும் காணப்படுகின்றமை.

அல்லாஹ், சிறிய ஒரு செயலுக்கு மிகப்பெரும் நன்மையை வழங்குவதன் மூலம் தனது அடியார்களுடன் கொண்டுள்ள எல்லையற்ற அவனது கருணையை இது விபரிக்கின்றமை.

التصنيفات

பொதுவான திக்ருகள்