பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை.

பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை".

[ஹஸனானது-சிறந்தது] [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்]

الشرح

பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை, ஏனெனில் அதுவே ஒரு வணக்கமாகும், அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்திருப்பது அவனை வணங்கவே, அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது அவனது ஆற்றல், விசாலமான அறிவு, பிரார்த்தனை புரிபவனின் இயலாமை, அவனது தேவை என்பவற்றை உணர்த்துகின்றது. இதனால்தான் பிரார்த்தனை அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயமாக உள்ளது.

فوائد الحديث

துஆவின் சிறப்பும், அது அல்லாஹ்விடம் மிகச் சிறந்த, கண்ணியத்திற்குரிய விடயங்களில் ஒன்றாக உள்ளதும் இந்நபிமொழியில் இருந்து தெளிவாகின்றது.

பிரார்த்தனையைத் தூண்டி, ஊக்குவித்தல், ஏனெனில் அதுதான் அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயமாக உள்ளது.

التصنيفات

பிரார்த்தனையின் சிறப்புகள், பிரார்த்தனையின் சிறப்புகள்