'எனக்குப் பின்னர் ஆண்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய (சோதனையாக) பெண்களை விட வேறெதனையும் நான்…

'எனக்குப் பின்னர் ஆண்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய (சோதனையாக) பெண்களை விட வேறெதனையும் நான் விட்டுச் செல்ல வில்லை'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எனக்குப் பின்னர் ஆண்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய (சோதனையாக) பெண்களை விட வேறெதனையும் நான் விட்டுச் செல்ல வில்லை'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆண்களுக்கு மிகவும் துன்பத்தை ஏற்படுத்தும் சோதனையாகவும், பரீட்சையாகவும் பெண்களைத் தவிர வேறு எதனையும் தனக்குப் பிறகு விட்டுச்செல்லவில்லை என்பதை குறிப்பிடு கிறார்கள். அவள் அவனது குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தால், அவன் இஸ்லாமிய சட்டத்தை மீறி அவளைப் பின்தொடரலாம். அவள் அவனுக்கு அந்நியமாக இருந்தால், அவனுடன் கலந்து தனிமையாக இருப்பதினால் அதன் விளைவால் பல தீமைகள் நிகழலாம்.

فوائد الحديث

ஒரு முஸ்லிம் பெண்களின் சோதனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் அவள் மூலம் சோதனைக்கு வழிவகுக்கும் ஒவ்வொரு பாதையையும் தடுக்க வேண்டும்.

ஒரு முஃமின் அல்லாஹ்விடம் புகழிடம் தேடுதல் வேண்டும், மற்றும் சோதனையிலிருந்து பாதுகாப்பாக இருக்க அவனிடமே ஆதரவும் வைக்க வேண்டும்.

التصنيفات

மனோ இச்சையைக் கண்டித்தல்