"புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும்…

"புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்".

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார் : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள். அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

புறம் பேசுதலின் உண்மை நிலையை நபியவர்கள் இங்கு தெளிவு படுத்துகின்றார்கள். ஒரு சகோதரரைப் பற்றி இல்லாத சந்தர்ப்பத்தில் அவர் வெறுக்கும் செய்தியைக் கூறுவதாகும். அது அவருடைய தோற்றம் பற்றியதாகவோ, குணம் பற்றியதாகவோ அவரிடம் இருக்கக் கூடியதாகவே இருக்கலாம். குறித்த அந்த பண்பு அவரிடம் இல்லாவிடில் தடுக்கப்பட்ட புறத்துடன், ஒரு மனிதனிடம் இல்லாததை அவன் பேரில் இட்டுக்கட்டுவதையும் இணைத்து விடுவதாகும்.

فوائد الحديث

புறம் என்பது உனது சகோதரரைப் பற்றி இல்லாத சந்தர்ப்பத்தில் அவர் வெறுக்கும் செய்தியைக் கூறுவதாகும்.

இறைநிராகரிப்பாளர் விடயத்தில் புறம் பேசுவது ஹராமாக மாட்டாது, ஏனெனில் இந்த நபிமொழியில் புறம் சகோதரனைப் பற்றிப் பேசுவதையே குறித்துக் காட்டியுள்ளது, அதன் மூலம் நாடப்படுவது முஸ்லிம் சகோதரர் ஆகும்.

ஒரு மனிதனிடம் இல்லாததை வைத்து அவனைப் பற்றிப் பேசினால் அது அவதூறாகும்.

நபி (ஸல்) அவர்களின் அழகான கற்பித்தல் முறையை இங்கு அவதானிக்கலாம். கேள்வி - பதில் தோரணையில் சில விடயங்களை விளக்குகின்றார்கள்.

"அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்ததன் மூலம் நபித்தோழர்கள் நபியவர்களுடன் பேணும் ஒழுக்கத்தை அவதானிக்கலாம்.

التصنيفات

பேசுதல், அமைதிகாத்தல் என்பவற்றின் ஒழுங்குகள்