நபி (ஸல்) அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக் கொள்வார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக் கொள்வார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

நபி (ஸல்) அவர்களுக்கு வாசனைப் பொருட்கள் வழங்கப்பட்டால் அதனைத் திருப்பவோ, மறுக்கவோ மாட்டார்கள். ஏனெனில் மற்றுமொரு அறிவிப்பில் இடம்பெற்றிருப்பது போன்று அது எடுத்துச் செல்வதற்கு எளிதானதும் சிறந்த நறுமணமும் ஆகும்.

فوائد الحديث

நறுமணப் பொருட்கள் வழங்கப்படும் போது அதனை ஏற்பது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதனைச் சுமந்து செல்லச் செலவு கிடையாது, அதனை ஏற்பதால் கொடுத்தவர் சொல்லிக் காட்டும் அளவு முக்கியத்துவமும் கிடையாது.

நறுமணங்களை விரும்பி, அதனைத் திருப்பாமல் இருப்பதில் நபி (ஸல்) அவர்களுடைய பூரணமான நற்குணம் தெளிவாகின்றது.

எப்போதும் வாசனைப் பொருட்களைப் பயன் படுத்துதல் வேண்டும், ஏனெனில் இது அடியானின் தூய்மையைக் காட்டுகின்றது, எனவே நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.).

التصنيفات

ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள், ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்