சிறப்புக்களும் ஒழுக்கங்களும் - الصفحة 4

சிறப்புக்களும் ஒழுக்கங்களும் - الصفحة 4

13- நீங்கள் காற்றை தூற்றாதீர்கள். அவ்வாறு நீங்கள் அதில் விரும்பாதவற்றை கண்டால் ' அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக்க மின் கைரி ஹாதிஹிர் ரீஹி வகைர மாபீஹா வகைர மா உமிரத் பிஹி. வஅவூது பிக மின் ஷர்ரி ஹதிஹிர்ரீஹீ வஷர்ரி மா பீஹா வஷர்ரி மா உமிரத் பிஹி பிஹி 'என்று கூறுங்கள். பொருள் : யாஅல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையையும், அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் இது எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறோம். இதன் தீங்கை விட்டும், அது மறைத்து வைத்துள்ள தீங்கைவிட்டும் அது எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்'

15- ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால்.(அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமழான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால். (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும்.}