அதிகமாக சாபமிடுவோர் நிச்சயமாக மறுமை நாளில் சிபாரிசு செய்கின்றவர்களாகவும், சாட்சி கூறுகின்றவர்களாவும்…

அதிகமாக சாபமிடுவோர் நிச்சயமாக மறுமை நாளில் சிபாரிசு செய்கின்றவர்களாகவும், சாட்சி கூறுகின்றவர்களாவும் இருக்க மாட்டார்கள்.

"அதிகமாக சாபமிடுவோர் நிச்சயமாக மறுமை நாளில் சிபாரிசு செய்கின்றவர்களாகவும், சாட்சி கூறுகின்றவர்களாவும் இருக்க மாட்டார்கள்." என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். என்று அபு தர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

அதிகமாக சாபமிடுவோர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எந்தவொரு அந்தஸ்தும் கிடையாது.சாட்சியில் நீதி நியாயமானவர்களின் சாட்சியே ஏற்றுக்கொள்ளப்படும் மேலும் அதிகமாக.சாபமிடுகின்றவர்கள் நீதியானவர்கள் அல்ல என்றபடியால் அவர்களின் சாட்சி இவ்வுலகிலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை மறு உலகிலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.மேலும் மறுமையில்.தங்களின் சகோதரர்களின் சுவர்க்கப் பிரவேசம் தொடர்பாக அவர்களுக்காக அவர்கள் செய்யும் சிபாரிசுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.அதுமாத்திரமின்றி முன்னைய ரஸூல்மார்கள் அல்லாஹ்வின் தூதை தம் சமூகத்தினருக்கு எத்தி வைத்தனர்,என்று அந்த சமூகத்தவர்களுக்கு எதிராக அவர்கள் தெரிவிக்கும் சாட்சியமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.என அதிகமாக சாபமிடும் செயல் குறித்து இந்த ஹதீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

التصنيفات

தீய குணங்கள்