إعدادات العرض
(பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; இலாபத்தில் கிடைக்கும் பரக்கத்தை அழித்துவிடும்
(பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; இலாபத்தில் கிடைக்கும் பரக்கத்தை அழித்துவிடும்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : "(பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; இலாபத்தில் கிடைக்கும் பரக்கத்தை அழித்துவிடும்".
الترجمة
العربية Bosanski English Español فارسی Français Indonesia Русский اردو 中文 हिन्दी Hausa Kurdî Português සිංහල Kiswahili অসমীয়া Tiếng Việt ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული मराठी Moore ไทย Македонски తెలుగు Українська ਪੰਜਾਬੀ دری አማርኛ বাংলা Malagasy Tagalog ភាសាខ្មែរ ಕನ್ನಡ پښتو Türkçe Svenska Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி ﷺ அவர்கள், வியாபார நடவடிக்கைகளில் விற்றல் வாங்கலின் போது ஒருவர் உண்மையையே சொன்னாலும்—சத்தியம் செய்வதையும், அதனை அதிகமாக செய்வதையும் எச்சரித்தார்கள். சத்தியம் செய்வதால் பொருள் விற்பனை அதிகரித்து சந்தையில் குறித்த பொருளுக்கு கிராக்கி ஏற்படலாம். ஆனால் அது இலாபம் மற்றும் வருமானத்தில் உள்ள பரகத்தை (அருள்வளத்ததை) குறைத்து, அழித்துவிடும். மேலும் அல்லாஹ், அவனது செல்வம் அழிவதற்கான பல வழிகளை ஏற்படுத்தக் கூடும்—திருட்டு, தீவிபத்து, மூழ்குதல், பறிமுதல், கொள்ளை அல்லது பிற காரணங்களால் அவனது சொத்து நஷ்டமடையலாம்.فوائد الحديث
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது மிகவும் புனிதமான விடயமாகும். அதற்கான தேவை இருக்கும் போது மட்டுமே அதைச் செய்ய வேண்டும்.
தடை செய்யப்பட்ட (ஹராம்) வருமானம் அளவில் அதிகமாக இருந்தாலும், அதில் எந்த பரகத்தோ (அருள்வளமோ) நன்மையோ கிடையாது.
முல்லா காரி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்: சம்பாதித்த செல்வத்தின் பரகத் நீங்குவது பல வகைகளில் இருக்கலாம்— • செல்வத்தில் நேரடியாக நஷ்டம் ஏற்படுதல், • பயனில்லாத வழிகளில் செலவழிக்கப்படுதல் (இம்மையிலும் பயன் இல்லை, மறுமையிலும் பலன் இல்லை). • செல்வம் இருந்தும் அதனால் பயன் அடைய முடியாத நிலை, • அல்லது நன்றி அறியாத ஒருவருக்குச் செல்வம் அனந்தரமாக செல்வது.
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்: வியாபாரத்தில் அதிகமாக சத்தியம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தேவையில்லாமல் சத்தியம் செய்வது விரும்பத்தகாதது (மக்ரூஹ்) ஆகும். அதனுடன் பொருளை விளம்பரப்படுத்தும் நோக்கம் சேர்ந்தால், சிலவேளை வாங்குபவர் சத்தியத்தால் ஏமாறும் வாய்ப்பும் உண்டு.
அதிகமாக சத்தியம் செய்வது ஈமானிலும் தௌஹீதிலும் குறைவை ஏற்படுத்தும். ஏனெனில் அதிக சத்தியம் இரண்டு தீமைகளுக்கு வழிவகுக்கிறது: ஒன்று: சத்தியத்தை இலகுவாக எடுத்துக்கொள்வது, அக்கறையின்மை. மற்றொன்று: பொய்—அதிகமாக சத்தியம் செய்வோர் பொய்யில் விழும் அபாயம் அதிகம். எனவே சத்தியங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படுத்தக் கூடாது. இதனாலேயே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: 'உங்கள் சத்தியங்களைப் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்' (மாயிதா: 89).
