إعدادات العرض
'அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொற்சுருக்கமும் பொருட்செரிவும் மிக்க துஆக்களை விரும்பி ஓதுவார்கள்; அவை தவிர்ந்த…
'அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொற்சுருக்கமும் பொருட்செரிவும் மிக்க துஆக்களை விரும்பி ஓதுவார்கள்; அவை தவிர்ந்த பிற துஆக்களை விட்டு விடுவார்கள்.'
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறரார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொற்சுருக்கமும் பொருட்செரிவும் மிக்க துஆக்களை விரும்பி ஓதுவார்கள்; அவை தவிர்ந்த பிற துஆக்களை விட்டு விடுவார்கள்.'
[சரியானது] [இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt ئۇيغۇرچە Hausa Kurdî Português සිංහල Русский Kiswahili অসমীয়া ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ไทย Македонски తెలుగు मराठी Українська ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy ភាសាខ្មែរ ಕನ್ನಡ پښتو Svenska Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி ﷺ அவர்கள், இம்மை மறுமை நலன்களை உள்ளடக்கிய சொற்சுருக்கமும் பொருட்செரிவுமிக்க துஆக்களை விரும்பி ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். அந்த துஆக்கள் அல்லாஹ்வை புகழ்வதையும், நல்ல குறிக்கோள்களையும் உள்ளடக்கியதாக இருந்தன. இதற்கு மாறானவற்றை விட்டுவிடுவார்கள்.فوائد الحديث
நன்மைகளை உள்ளடக்கிய எளிய சொற்களால் துஆ செய்வது விரும்பத்தக்கது. துஆவில் அளவுக்கு மீறிய சிரமமும், செயற்கை அலங்காரமும் தவிர்க்கப்பட வேண்டும். இது நபி ﷺ அவர்களின் வழிமுறைக்கு எதிரானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு, 'ஜவாமிஉல் கலிம்' (சொற்சுருக்கமும் பொருட்செரிவும்)எனும் சிறப்பு அளிக்கப்பட்டுள்ளமை.
நபி ﷺ அவர்கள் ஓதியதாக உறுதியாக வந்த துஆக்களைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்; அவை நீளமாக இருந்தாலும், சொற்கள் அதிகமாக இருந்தாலும், அனைத்தும் பரந்த அர்த்தங்களை கொண்ட துஆக்களே ஆகும்.
التصنيفات
துஆவின் ஒழுங்குகள்