إعدادات العرض
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு…
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு' என்று கூறுவார்கள். இதன் பொருள் : யாஅல்லாஹ்! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு' என்று கூறுவார்கள். இதன் பொருள் : யாஅல்லாஹ்! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Hausa Kurdî Português සිංහල Kiswahili অসমীয়া Tiếng Việt ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ไทย Македонски తెలుగు मराठी Українська ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy ភាសាខ្មែរ ಕನ್ನಡ پښتو Svenska Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், ஸஜ்தாவில் இருக்கும் போது இவ்வாறு துஆ செய்தார்கள்: யா அல்லாஹ்! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக' அதாவது, யாஅல்லாஹ் என் பாவங்களை மூடி மறைப்பாயாக, அவற்றின் விளைவுகளிலிருந்து என்னைக் பாதுகாத்து, முழுமையாக மன்னித்து, பரிசுத்தப்படுத்துமாறு வேண்டுகிறேன், சிறிய பாவங்களையும், பெரிய பாவங்களையும், முதல் செய்த பாவத்தையும், இறுதியாக செய்த பாவத்தையும், அவற்றுக்கு நடுவிலுள்ள அனைத்தையும், வெளிப்படையாக செய்த பாவங்களையும், ரகசியமாக செய்த பாவங்களையும் (அல்லாஹ் மட்டுமே அறிந்த பாவங்களையும்) மன்னிக்குமாறும் வேண்டுகிறேன்.فوائد الحديث
இப்னு கய்யிம் (رحمه الله) அவர்களின் விளக்கம்: சிறியதும் பெரியதும், மிகச்சிறியதும் மிகப்பெரியதும் வெளிப்படையானதும் மறைவானதும், ஆரம்பமாக செய்ததும் இறுதியாக செய்ததும் ஆகிய அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்டல். இவ்வாறு எல்லா வகையான பாவங்களையும் உள்ளடக்கி கேட்டிருப்பது மனிதன் அறிந்த பாவங்களையும், அறியாமல் செய்த பாவங்களையும் கூட உள்ளடக்கி தௌபா (இரட்சிப்பாக) வாக மாற்றுவதாக அமையும்.
சிறிய பாவம் (الدق)' அத்திக்கு' ஆரம்பமாகக் குறிப்பிடப்பட்டதற்கான காரணம் : துஆ செய்பவர் தன் வேண்டுகோளில் சிறியதிலிருந்து பெரியதிற்கு படிப்படியாக உயர்ந்து செல்கிறார் என்பதாகும். பெரும்பாலான நேரங்களில், சிறிய பாவங்களை அலட்சியமாக செய்வதாலும் அதில் தொடர்ச்சியாக இருப்பதினாலும் பெரிய பாவங்கள் உருவாகின்றன. ஆகவே, பெரிய பாவங்களுக்கு வழிவகுக்கும் சிறிய பாவங்கள் முதலில் குறிப்பிடப்பட்டன. அந்த வகையில் பெரிய பாவத்திற்கு வழிவகுக்கின்றவற்றை முதலில் குறிப்பிடுவதே பொருத்தமாகும்.
அல்லாஹ்விடம் சிறிய மற்றும்; பெரிய மற்றும் எல்லா பாவங்களிலிருந்தும் மனமார வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். அத்துடன் துஆ செய்வதில் பணிவும், தாழ்மையும் இருக்க வேண்டும்.
இமாம் நவவி (رحمه الله) அவர்கள் : இங்குள்ள சில வார்த்தைகள் மற்றவற்றுக்குப் பயன்படா விட்டாலும், பிரார்த்தனையை உறுதிப்படுத்தும் பல வார்த்தைகள் இங்கே உள்ளன என குறிப்பிடுகிறார்.
التصنيفات
திக்ரில் நபியவர்களின் வழிகாட்டல்