إعدادات العرض
பாங்கு சொல்வதிலும், முதல் ஸப்பிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றால்,சீட்டுப் போடுவதைத் தவிர…
பாங்கு சொல்வதிலும், முதல் ஸப்பிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றால்,சீட்டுப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றால், அவர்கள் சீட்டுப் போடுவார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : பாங்கு சொல்வதிலும், முதல் ஸப்பிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றால்,சீட்டுப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றால், அவர்கள் சீட்டுப் போடுவார்கள். தொழுகைக்கு நேரகாலத்துடன் செல்வதன் சிறப்பை அவர்கள் அறிவார்கள் என்றால், அதற்காக போட்டி போட்டுக் கொள்வார்கள். மேலும், இஷாத் தொழுகையிலும், பஜ்ர் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிவார்கள் என்றால், தவன்றாவது அதற்கு வருவார்கள்.
الترجمة
العربية Tiếng Việt অসমীয়া Nederlands Indonesia Kiswahili Hausa සිංහල English ગુજરાતી Magyar ქართული Română Русский Português ไทย తెలుగు मराठी دری Türkçe አማርኛ বাংলা Kurdî Malagasy Македонски Tagalog ភាសាខ្មែរ Українська ਪੰਜਾਬੀ Wolof پښتو Moore Svenska മലയാളം Bosanskiالشرح
இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, பாங்கு சொல்வதிலும், முதல் ஸப்பிலும் உள்ள சிறப்பையும், நன்மையையும், பரகத்தையும் மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றால், சீட்டுக் குழுக்கித் தான் அதற்காக முந்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் அவர்கள் செய்வார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்திலேயே செல்வதன் சிறப்பை அவர்கள் அறிவார்கள் என்றால், அதற்காக போட்டி போட்டுக் கொள்வார்கள். மேலும், இஷாத் தொழுகையிலும், பஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையின் அளவை அவர்கள் அறிவார்கள் என்றால், ஒரு குழந்தை ஆரம்ப கட்டங்களில் முழங்காலால் தவன்று செல்வது போன்று, தவன்றாவது அதற்கு வருவார்கள்.فوائد الحديث
அதானின் சிறப்பைத் தெளிவுபடுத்தல்.
முதல் ஸப்பிலும், இமாமுக்கு நெருக்கமாக இருப்பதிலும் உள்ள சிறப்பைத் தெளிவுபடுத்தல்.
தொழுகைக்கு அதன் ஆரம்ப, விரும்பத்தக்க நேரத்தில் செல்வதன் சிறப்பைத் தெளிவுபடுத்தல். ஏனெனில், அதற்கு மகத்தான சிறப்புக்கள் உள்ளன போன்று, பல்வேறு பயன்களையும் அது தருகின்றது. உதாரணமாக, முதலாவது ஸப்பை அடைதல், தொழுகையை ஆரம்பத்திலேயே அடைந்து கொள்ளல், நபில் தொழுகைகளை நிறைவேற்றல், அல்குர்ஆனை ஓதுதல், மலக்குகள் அவருக்காக இஸ்திஃபார் செய்யும் சிறப்பைப் பெறல், அவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் காலமெல்லாம் தொழுகையில் இருக்கின்றார் என்ற சிறப்பை அடைதல் போன்றவை.
இந்த இரு தொழுகைகளின் ஜமாஅத்துக்கு சமுகமளிப்பதற்கு ஆர்வமூட்டல். அவ்விரண்டிலும் உள்ள அதிக சிறப்பை உணர்த்துதல். ஏனெனில், இவ்விரண்டும் தூக்கத்தின் ஆரம்ப நேரத்தையும், இறுதிநேரத்தையும் கலங்கச் செய்துவிடுவதால் அவை மனத்திற்கு சிரமமாக உள்ளன. இதனாலேயே, இவ்விரண்டும் நயவஞ்சகர்களுக்கு மிகச் சிரமமான தொழுகையாக உள்ளன.
இமாம் நவவீ கூறுகின்றார்கள் : நெருக்கடி மற்றும் பிணக்கு ஏற்பட வாய்ப்புள்ள உரிமைகளில் சீட்டுக் குழுக்கல் இருப்பதை இது உறுதிப்படுத்துகின்றது.
இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசையை விடச் சிறந்தது. மூன்றாம் வரிசை, நான்காம் வரிசையை விடச் சிறந்தது. இவ்வாறே அடுத்தடுத்த வரிசைகள் வரும்.
