إعدادات العرض
உங்களில் யாராவது, உடலில் ஆரோக்கியத்துடனும், தன் வீடு மற்றும் குடும்பத்தில் பாதுகாப்புடனும், அன்றைய…
உங்களில் யாராவது, உடலில் ஆரோக்கியத்துடனும், தன் வீடு மற்றும் குடும்பத்தில் பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் ஆகும்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் இப்னுல் மிஹ்ஸன் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் யாராவது, உடலில் ஆரோக்கியத்துடனும், தன் வீடு மற்றும் குடும்பத்தில் பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் ஆகும்.
[நம்பகமானது (ஹஸன்)] [இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी සිංහල ئۇيغۇرچە Hausa Kurdî Tiếng Việt অসমীয়া Nederlands Kiswahili ગુજરાતી Magyar ქართული Română Português ไทย తెలుగు मराठी دری አማርኛ Malagasy Македонски ភាសាខ្មែរ Українська ਪੰਜਾਬੀ Wolof پښتو Moore Svenska മലയാളം ಕನ್ನಡ မြန်မာ Shqipالشرح
இங்கு நபியவர்கள், முஸ்லிம்களே! உங்களில் யாராவது, உடலில் நோய்கள் அற்று ஆரோக்கியத்துடனும், தன்னிலும், தனது குடும்பம் மற்றும் தான் செல்லும் பாதைகளிலும் அச்சமற்று பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான ஹலாலான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் என்று அறிவிக்கின்றார்கள்.فوائد الحديث
ஆரோக்கியம், அபயம், வாழ்வாதாரம் என்பவை எந்தளவு அவசியமானவை என்பதனை உணர்த்துதல்.
ஓர் அடியான், அல்லாஹ் தனக்கு இந்த அருட்கொடைகளை வழங்கியுள்ளமைக்காக அவனைப் புகழ்வது அவசியமாகும்.
மனதிருப்தி, உலகப் பற்றற்ற வாழ்க்கை ஆகியவற்றில் ஆர்வமூட்டல்.
التصنيفات
உலகப் பற்றின்மையும் பேணுதலும்