إعدادات العرض
அற்பமாகக் கருதப்படும் பாவங்களை நான் எச்சரிக்கின்றேன்
அற்பமாகக் கருதப்படும் பாவங்களை நான் எச்சரிக்கின்றேன்
நபியவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள், அறிவிக்கின்றார்கள் : அற்பமாகக் கருதப்படும் பாவங்களை நான் எச்சரிக்கின்றேன். அற்பமாகக் கருதப்படும் பாவங்களுக்கான உதாரணமாவது, ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் இறங்கிய ஒரு கூட்டத்தினரைப் போன்றதாகும். இவர் ஒரு குச்சியைக் கொண்டவந்தார். மற்றையவர் இன்னுமொரு குச்சியைக் கொண்டுவந்தார். இவ்வாறே அவர்கள் தமது ரொட்டியை வேகவைத்து விட்டார்கள். அற்பமாகக் கருதப்படும் பாவங்களை செய்பவர், அவற்றைக் கொண்டு எப்போதாவது பிடிக்கப்பட்டால், அவரை அவை அழித்தே விடும்.
الترجمة
العربية Tiếng Việt অসমীয়া Nederlands Indonesia Kiswahili Hausa සිංහල English ગુજરાતી Magyar ქართული Română Русский Português ไทย తెలుగు मराठी دری Türkçe አማርኛ বাংলা Kurdî Malagasy Македонски Tagalog ភាសាខ្មែរ Українська ਪੰਜਾਬੀ پښتو Moore Wolof മലയാളം हिन्दी Svenska Bosanskiالشرح
இங்கு நபியவர்கள், சிறிய பாவங்களில் கவனயீனமாக ஈடுபடுவதையும், அவற்றை அதிகமாகச் செய்வதையும் எச்சரிக்கின்றார்கள். ஏனெனில், அவை ஒன்றிணைந்து அவனை அழித்து விடுகின்றன. அதற்கு உதாரணமாவது, ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் இறங்கிய ஒரு கூட்டத்தினரைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் ஒரு குச்சியைக் கொண்டு வந்தனர். இவ்வாறே அவர்கள், தாம் சேர்த்த குச்சிகளைக் கொண்டு தமது ரொட்டியை வேகவைத்து விட்டார்கள். அற்பமாகக் கருதப்படும் பாவங்களை செய்பவர், அவர் தௌபா செய்யாத நிலையிலும், அவரை அல்லாஹ் மன்னிக்காத நிலையிலும், அவற்றைக் கொண்டு எப்போதாவது பிடிக்கப்பட்டால், அவரை அவை அழித்தே விடும்.فوائد الحديث
இலகுவாகப் புரியவைக்கவும், தெளிவை அதிகப்படுத்தவும் உதாரணங்கள் கூறுவது நபி (ஸல்) அவர்களது வழிமுறையாகும்.
அற்பமாகக் கருதப்படும் சிறிய பாவங்களை எச்சரித்தல். அதை நீக்கிக் கொள்வதை துரிதப்படுத்த ஆர்வமூட்டல்.
அற்பமாகக் கருதப்படும் பாவங்கள் என்பது, பல அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது : ஓர் அடியான், சிறுபாவங்கள் என நினைத்துக்கொண்டு செய்யும் பெரும்பாவங்கள். இரண்டாவது : ஓர் அடியான் பொருட்படுத்தாமலும், தவ்பாச் செய்யாமலும் செய்யும் சிறிய பாவங்கள். இந்த சிறிய பாவங்கள் அவனிடம் ஒன்றிணைந்து, அவனை அழித்தே விடுகின்றன. மூன்றாவது : ஓர் அடியான் பொருட்படுத்தாமல் செய்யும் சிறு பாவங்கள். அவை அழிவையேற்படுத்தும் பெரும்பாவங்களில் வீழந்துவிட காரணமாக அமைந்து விடுகின்றன.
التصنيفات
பாவங்களைக் கண்டித்தல்