யார் رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கட்டாயமாகி…

யார் رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும். (பொருள் : நான் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் பொருந்திக் கொண்டு விட்டேன்.)

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும். (பொருள் : நான் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் பொருந்திக் கொண்டு விட்டேன்.)

[சரியானது] [இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்]

الشرح

இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, யார், 'நான் அல்லாஹ்வை ரப்பாகவும் (அதாவது, கடவுளாகவும், பொறுப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், தலைவனாகவும், சீர்த்திருத்துபவனாகவும்), இஸ்லாமை (அதாவது, ஏவல், விலக்கல்கள் உட்பட, அதன் அனைத்து சட்டங்களையும்) மார்க்கமாகவும் (அதாவது, சட்டமாக உள்ளத்தால் ஏற்றுக் கட்டுப் பட்டு), முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் (நபியாகவும், மேலும் அவர்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்ட, அவர்கள் எமக்கு எத்திவைத்த அனைத்தையும்) பொருந்திக் கொண்டு விட்டேன் என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கடமையாகி விட்டது.

فوائد الحديث

இந்த தஆவைக் கூறுவதற்கு ஆர்வமூட்டல், மேலும், அதற்குள்ள கூலியைத் தெளிவுபடுத்தல்.

அல்லாஹ்வை ரப்பாகப் பொருந்திக் கொள்வதென்பது, ஓர் அடியான் அவனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பதைப் பொதிந்துள்ளது.

முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும், தூதராகவும் பொருந்திக் கொள்வதென்பது, அவர்களுக்கு வழிப்படுவதையும், அவர்களது ஸுன்னாவுக்குக் கட்டுப்படுவதையும் உள்ளடக்கிக் கொள்ளும்.

இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக் கொள்வதென்பது, அல்லாஹ் தனது அடியார்களுக்காக தெரிவு செய்துள்ளதைப் பொருந்திக் கொள்வதாகும்.

வேறு சில அறிவிப்புக்களில் வந்துள்ள பிரகாரம், அதானில் ஷஹாதாவுடைய வார்த்தையைக் கேட்கும் போது, இந்த துஆவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

வேறு ஒரு ஹதீஸில் இந்த துஆவைக் காலை, மாலையில் ஓதுவது விரும்பத்தக்கது என்றும் வந்துள்ளது.

التصنيفات

பொதுவான திக்ருகள்