சிறப்புக்களும் ஒழுக்கங்களும் - الصفحة 2

சிறப்புக்களும் ஒழுக்கங்களும் - الصفحة 2

17- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!

27- உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, 'இன்னின்னவற்றைப் படைத்தவன் யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், 'உன் இறைவனைப் படைத்தவன் யார்?' என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்

28- 'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அவை இரண்டுக்கும் ஒன்றை ஒத்த சமமான வெகுமதி- கூலி- கிடைக்கும். ஒரு நல்ல செயலுக்கு பத்து மடங்கு வெகுமதி-கூலி- கிடைக்கும்,(அதே போன்று) ஒரு நல்ல செயலுக்கு எழுநூறு மடங்கு வெகுமதி கிடைக்கும்

29- 'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்; மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல், ஆண்களின் எண்ணிக்கை குறைதல், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் மட்டுமே அவர்களைக் கவனிக்கும் -நிர்வகிக்கும்-அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றன மறுமை நாளின் அடையாளங்களுள் சிலதாகும்

38- 'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாயோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று அவரிடம் கூறப்படும்'

41- இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அவர்கள் அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என (மீண்டும்) கேட்டார்கள். நான் அல்லாஹு லாஇலாஹ இல்லா{ஹவல் ஹய்யுல் கய்யூம் எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம் என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே! என்றார்கள்

48- உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்')