'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கும் மூன்று ஒட்டகங்களை

'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கும் மூன்று ஒட்டகங்களை

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கும் மூன்று ஒட்டகங்களை தனது குடும்பத்தாரிடம் திரும்பி வரும்போது பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? என நபியவர்கள் கேட்டபோது நாங்கள்: 'ஆம்' என்றோம். அப்போது அவர்கள் 'உங்களில் ஒருவர் தனது தொழுகையில் ஓதும் மூன்று வசனங்கள் அவருக்கு மூன்று பெரிய, கொழுத்த, கர்ப்பிணி ஒட்டகங்களை விட சிறந்தவை.' எனக் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபியவர்கள் இந்த ஹதீஸில் தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவதற்குரிய கூலி ஒரு மனிதர் தனது வீட்டில் மூன்று பெரிய மற்றும் கொழுத்த கர்ப்பிணி ஒட்டகங்கள் இருப்பதை விட சிறந்தது என தெளிவுபடுத்துகிறார்கள்.

فوائد الحديث

தொழுகையில் அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு விபரிக்கப்பட்டிருத்தல்.

நற்காரியங்கள்; அழிந்து போகும் இவ்வுலகப்பொருட்களை விட சிறந்தும் நிலையானதுமாகும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றமை.

இந்த சிறப்பானது மூன்று வசனங்களை மாத்திரம் ஒதுவதுடன் வரையறுக்கப்பட்டதல்ல, மாறாக தொழுபவர் தனது தொழுகையில் அல்குர்ஆன் வசனங்களை எவ்வளவு அதிகம் ஒதுகிறாரோ அதற்கேற்ப அவரின் கூலி கர்ப்பிணி ஒட்டகைகளின் எண்ணிக்கையின் அளவை விடவும் அதிகமாக இருக்கும் என்பதை புரிந்த கொள்ள வேண்டும்.

التصنيفات

அல்குர்ஆனிக் சிறப்புகள்