“அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய…

“அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல் என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல் என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல் என்றார்கள்;(இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்) இவற்றை நான் கேட்ட கேள்விகளுக்கு இவற்றை குறிப்பிட்டார்கள், நான் (கேள்வியை) மேலும் அதிகப்படுத்தியிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் இன்னும் அதிகமாக கூறியிருப்பார்கள்.”

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது? அதற்கு நபியவர்கள்; பர்ழான தொழுகைகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறுத்துக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதாகும் எனப் பதிலளித்தார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்களில் இரண்டாவதாக பெற்றோருக்கு உபகராம் புரிதல், அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுதல் அவர்களுக்கு நோவினை செய்யாதிருப்பதன் மூலம் அவர்கள் இருவருக்கும் நன்மை செய்தல் எனக் குறிப்பிட்டார்கள். மூன்றாவதாக அல்லாஹ்வின் வார்த்தையான கலிமாவை மேலோங்கச் செய்யவும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கவும், அவனின் அடையாளங்களை தெரியப்படுத்தவும் உயிராலும் உடமையாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல். மேற்படி செயல்களை நபியவர்கள் நான் கேட்டதன் அடிப்படையில் எனக்குக் கூறினார்கள். நான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான விடயங்கள் எது என தொடர்ந்தும் கேட்டிருந்தால் இதனைவிட அதிகமாக கூறியிருப்பார்கள் என இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

அல்லாஹ்வின் விருப்பத்திற்கிணங்க செயல்கள் வேறுபடுகின்றமை.

செயல்களில் மிகச்சிறப்புக்குரியதில் ஆர்வம் கொண்டு செயல்பட வலியுறுத்தியிருத்தல்.

செயல்களில் மிகவும் சிறப்புக்குரியது எவை என்பதற்கான நபியவர்களின் பதில்கள் குறித்த நபர்களின் வேறுபாடு மற்றும் அவர்களின் நிலமைகளுக்கு ஏற்பவும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ளது என்பதற்கினங்கவும் வேறுபட்டு அமைந்திருந்தன.

التصنيفات

நல்லமல்களின் சிறப்புகள், தொழுகையின் சிறப்பு