அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது

அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது.

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والترمذي والنسائي]

الشرح

இங்கு நபியவர்கள், அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆவின் சிறப்பைத் தெளிவுபடுத்தும் விதமாக, அது தட்டப்படமாட்டாது என்றும், அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், எனவே, அந்நேரத்தில் துஆக் கேளுங்கள் என்பதாகவும் கூறுகின்றார்கள்.

فوائد الحديث

துஆக் கேட்பதில் இந்த நேரத்திற்கு உள்ள சிறப்பு

துஆக் கேட்பவர், துஆவின் ஒழுக்கங்களைப் பேணி, அதற்குரிய இடங்களையும், நேரங்களையும் கவனித்து, பாவங்களைத் தவிர்த்து, பேணுதல் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமானவற்றையும் தவிர்த்து, அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணமும் கொண்டிருந்தால், அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் அவரது துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

துஆ ஏற்றுக்கொள்ளப்படுவது பற்றி முனாவீ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : அதாவது, துஆவின் நிபந்தனைகள், அடிப்படைகள், ஒழுக்கங்கள் என அனைத்தும் இருக்க வேண்டும். அவற்றில் ஏதாவது விடுபட்டாலும், தன்னைத் தவிர வேறு யாரையும் குறை சொல்ல முடியாது.

துஆ ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது : ஒன்றில், உடனடியாக அவர் கேட்டது கொடுக்கப்படும், அல்லது, அதற்கு ஒத்த ஒரு தீங்கு அவரை விட்டும் தடுக்கப்படும். அல்லது, மறுமையில் அவருக்காக அது சேமித்து வைக்கப்படும். அது அல்லாஹ்வின் அறிவு மற்றும், அருளுக்கு ஏற்ப நடைபெறும்.

التصنيفات

துஆ அங்கீகரிக்கப்படுவதற்கான காரணிகளும் தடைகளும்