((ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை (திக்ர்) நினைவுகூறாமல் எழுந்து செல்வது செத்த…

((ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை (திக்ர்) நினைவுகூறாமல் எழுந்து செல்வது செத்த கழுதையை விட்டும் எழுந்து செல்வது போலாகும் . அது அவர்களுக்குக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமையும்))

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ((ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை (திக்ர்) நினைவுகூறாமல் எழுந்து செல்வது செத்த கழுதையை விட்டும் எழுந்து செல்வது போலாகும் . அது அவர்களுக்குக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமையும்))

[சரியானது] [இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவுகூறாமல் எழுந்து செல்வது துர்நாற்றமானதும், அழுக்கானதுமான ஒரு கழுதையின் பிணத்திற்கு முன் ஒன்றுகூடி விட்டு எழுந்துசெல்வதைப் போலாகும் என்று கூறுகின்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அங்கு இறைநினைவைப் பற்றிய பேச்சுக்களில் ஈடுபடாமல் இருந்தமையே அதற்கான காரணமாகும். மறுமையில் இந்த சபை அவர்களுக்குக் கைசேதமாகவும், நன்மைகளைக் குறைப்பதாகவும், நிரந்தரக் கவலையாகவும் இருக்கும்.

فوائد الحديث

இறைநினைவை விட்டும் பராமுகமாக இருப்பது எச்சரிக்கப்பட்டுள்ளது, சபைகளுக்கு மாத்திரமல்ல. மாறாக, ஏனையவைகளுக்கும் பொருந்தும். இமாம் நவவி கூறுகின்றார்கள்: ஒரு மனிதன் தான் அமர்ந்த இடத்திலிருந்து எழும்பும் போது, அல்லாஹ்வை நினைவுகூறாமல் எழுந்து செல்வது வெறுக்கத்தக்கதாகும்.

மறுமையில் அவர்களுக்கு ஏற்படும் கைசேதத்திற்கான காரணம் ஒன்றில், அந்த நேரத்தை இறைவழிபாட்டில் பயன்படுத்தாமையினால் தப்பிப் போன நன்மைகளை நினைத்தாகவோ, அல்லது, அல்லாஹ்வுக்கு மாறுசெய்து நேரத்தை வீணடித்தமையினால் பாவங்கள் கிடைத்தமையினாலோ ஆக இருக்கலாம்.

அனுமதிக்கப்பட்டவற்றின் மூலம் இவ்வாறான பராமுகம் ஏற்படுவதற்கே இந்த எச்சரிக்கை என்றால், புறம், கோல் போன்ற தடுக்கப்பட்டவற்றை உள்ளடக்கியிருக்கும் சபைகளின் நிலை என்ன?

التصنيفات

திக்ரின் சிறப்புகள்