தனித்துவிட்டவர்கள்

தனித்துவிட்டவர்கள்

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது 'ஜும்தான்' எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'செல்லுங்கள்: இது 'ஜும்தான்' மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் (முபர்ரித்தூண்கள்) வெற்றி பெற்றுவிட்டார்கள்;' என்று சொன்னார்கள். மக்கள், 'தனித்து விட்டவர்கள் (முபர்ரித்தூண்கள்) என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்' என்று பதிலளித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோரின் அந்தஸ்த்துக்களை தெளிவு படுத்துகிறார்கள் அவர்கள் தனித்துவமானவர்கள் ஏனையோரை விட இன்பம் நிறைந்த சுவர்க்கத்தில் உயர் அந்தஸ்துக்களை அடைந்து கொண்டவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். இவர்களின் நிலை ஏனைய மலைகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக திகழும் 'ஜும்தான்' என்ற மலைக்கு ஒப்பானது என்று விவரிக்கிறார்கள்.

فوائد الحديث

அதிகம் திக்ர் செய்வது மற்றும் அதில் திளைத்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும் ஏனெனில்; மறுமையில் வெற்றியும் மேன்மையும் அதிக வழிபாடுகள் மற்றும் வணக்கங்களில் உளத்தூய்மைப் பேணுவதில் தங்கியுள்ளது.

அல்லாஹ்வை நினைவுகூர்வது நாவினால் மாத்திரம் அல்லது உள்ளத்தினால் மாத்திரம் அல்லது நாவு மற்று உள்ளம் இரண்டினாலும் இடம் பெற முடியும், உள்ளத்தினாலும் நாவினாலும் அல்லாஹ்வை நினைவுகூர்வது இவற்றில் உயரிய படித்தரமாகும்.

திக்ர்; என்பது குறித்த நேரத்தில் கூறப்படும் திக்ர்களான காலை மாலை திக்ர் கடமையான தொழுகையின் ஓதப்படும் திக்ர் உட்பட ஏனைய பொதுவான திக்ருகள் அனைத்துமாகும்.

இமாம் நவவி கூறுகிறார் : திக்ரின் சிறப்பானது ஸுப்ஹனல்லாஹ் லாஇலாஹ இல்லல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் கூறுவதில் மாத்திரம் வரையறுக்கபட்டதன்று என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். மாறாக வாழிபாட்டின் மூலம் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடக்கும் ஒவ்வொருவரும் அல்லாஹ்வை நினைவு கூறுபவராக கருதப்படுகிறார்.

அல்லாஹ்வை நினைவுகூர்தல் மார்க்கத்தில் உறுதி மற்றும் பற்றை அடைந்து கொள்வதற்கான மிகப்பெரும் வழிகளில் ஒன்றாகும். அல்லாஹுத் தஆலா இவ்வாறு குறிப்பிடுகிறான் : "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்". (அன்ஃபால் : 45).

அல்லாஹ்வை நினைவு கூர்பவர்கள் ஜும்தான் மலைக்கு அதன் தனித்தன்மை மற்றும் தனி இருப்பு காரணமாக ஒப்பிடப்படுகிறார்கள். ஜும்தான் மலை மற்ற மலைகளிலிருந்து தனித்து இருப்பது போல்; அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்களும் தனித்து வேறுபட்டு காணப்படுகிறார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் இருந்தாலும், உள்ளத்தாலும் நாவாலும் அல்லாஹ்வை நினைத்து தனித்து நிற்கிறார்கள். அவர்கள் தனிமையின் தருணங்களில் ஆறுதலைக் காண்கிறார்கள், அதிகமாக மக்கள் மத்தியில் கலந்து பழகும்போது அவர்கள் தனிமையை உணர்கிறார்கள்.

மலை மற்றும் திக்ர் செய்வோருக்குக் குமிடையிலான மற்றொரு ஒற்றுமையை இங்கே குறிப்பிட முடியும். அதாவது பூமியின் உறுதிக்கு மலைகள் காரணம் என்பது போல, அல்லாஹ்வின் திக்ர் அவனுடைய மார்க்க உறுதிக்குக் காரணமாக அமைகிறது. இந்த இரண்டுக்கும் இடையே மேலும் ஒரு தொடர்பு உள்ளது. மதீனாவிலிருந்து மக்காவுக்குப் பயணிக்கும் ஒருவர், தான் மக்காவை அடைந்ததற்கான அடையாளமாக ஜும்தான் மலையை அடைகிறார். சுருக்கமாகச் சொன்னால், முதலில் அங்கு சென்றடைவது மக்காவை அடைவது போன்றது. இதைப் போல திக்ர் செய்பவர் இம்மை மறுமையில் உள்ள நன்மைகளை ஏற்கனவே அடைந்து விட்டார் போலும். அவர் தனது ஏராளமான திக்ருக்கள் மூலம் இந்த நற்பண்புகளுக்கு மற்ற அனைவருக்கும் முன் வந்துள்ளார் என்பதாகும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

التصنيفات

திக்ரின் சிறப்புகள்