எவன் தன் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ வயோதிபம் அடைந்திருக்கும் நிலையில் அவர்களை அவன் அடையப் பெற்றும்…

எவன் தன் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ வயோதிபம் அடைந்திருக்கும் நிலையில் அவர்களை அவன் அடையப் பெற்றும் சுவர்க்கம் செல்லவில்லையோ அவன் அழிந்து போகட்டும். அவன் அழிந்து போகட்டும். அவன் அழிந்து போகட்டும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: எவன் தன் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ வயோதிபம் அடைந்திருக்கும் நிலையில் அவர்களை அவன் அடையப் பெற்றும் சுவர்க்கம் செல்லவில்லையோ அவன் அழிந்து போகட்டும். அவன் அழிந்து போகட்டும். அவன் அழிந்து போகட்டும்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இழிவும் நாசமும் உண்டகாட்டும் எனப் பிரார்தித்தார்கள். அதாவது தனது மூக்கை மன்னில் தேய்த்துக்கொள்ளும் நிலைக்கு ஒப்பாக குறிப்பிட்டு மூன்று தடவைகள் அவன் மண்ணை கவ்வட்டும் எனப் பிரார்த்தித்தார்கள். அப்போது தோழர்கள் அவர்களிடம் நீங்கள் நாசமுண்டாகட்டும் எனப் பிரார்தனை செய்த அந்நபர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் எவனோருவன் தனது பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ வயோதிபத்தில் அடையப்பெற்று அவர்களுக்கு உபகாரம் செய்யாது, நோவினை செய்தன் காரணமாக அவர்களின் மூலம் சுவர்க்கம் செல்லாதவர் எனக் குறிப்பிட்டார்கள்.

فوائد الحديث

பெற்றோரைப் பேணி அவர்களுக்கு உபகாரம் செய்வது அவசியமாகும். இது சுவர்கம் செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும். குறிப்பாக அவர்கள் இருவரும் முதுமை நிலையில் பலவீனமாக இருக்கும் போது அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது மிகவும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும்.

பெற்றோரை நோவினை செய்வது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.

التصنيفات

பெற்றோருக்குப் பணிவிடைய செய்வதன் சிறப்பு