'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் மாலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம்…

'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் மாலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்.'

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் காலையை அடைந்தால், இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் மாலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்.' மாலையை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் காலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்' மேலும் ஒரு தடவை, 'உன்னிடமே மீள்வோம்.' என்றும் கூறினார்கள்.

[ஹஸனானது-சிறந்தது] [رواه أبو داود والترمذي والنسائي في الكبرى وابن ماجه]

الشرح

நபியவர்கள், பஜ்ர் உதயமாகி காலைப்பொழுதை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் : (யா அல்லாஹ்! நாம் உன்னைக் கொண்டே) உனது பாதுகாப்பிற்கு உட்பட்டவர்களாக, உனது அருளால் அரவணைக்கப்பட்டவர்களாக, உன்னை நினைவு கூறுவதில் ஈடுபட்டவர்களாக, உனது பெயரைக் கொண்டு உதவி தேடியவர்களாக, உனது பேருபகாரத்தினால் உள்வாங்கப்பட்டவர்களாக, உனது பாதுகாப்பினாலும், சக்தியினாலும் இயங்குபவர்களாக (காலையை அடைந்தோம்.) (உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே மரணிப்போம்.) இது முந்திய வசனங்களைக் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கும். அதேநேரம் அதனை மாலைநேரத்திற்கென மாற்றி, இவ்வாறு கூறவேண்டும் : யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உயிர்ப்பிப்பவன் எனும் உனது பெயரைக் கொண்டே நாம் உயிர்வாழ்கின்றோம். மரணிக்கச் செய்பவன் எனும் உனது பெயர் கொண்டே நாம் மரணிக்கின்றோம். (ஒன்றுசேர்க்கப்படுவது உன்னிடமே) அதாவது, மரணத்திற்குப் பின்னர் எழுப்பப்படுவதும், ஒன்று சேர்ந்த பின்னர் பிரிந்து செல்வதும் உன்னிடமே. எமது நிலை, எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் இவ்வாறே தொடர்ந்திருக்கும். அவனை விட்டு விலகியோ, அவனை விரோதித்தோ என்னால் இருக்க முடியாது. அஸ்ருக்குப் பின்னர், அவர் மாலை நேரத்தில் நுழைந்தவுடன் இவ்வாறு கூறுவார் : இவ்வுலகில் மீள்வதும், மறுமையில் ஒதுங்குவதும் உன்னிடமே. நீயே என்னை உயிர்ப்பிக்கின்றாய்! நீயே என்னை மரணிக்கச் செய்கின்றாய்.

فوائد الحديث

நபியவர்களைப் பின்பற்றி, இந்த துஆவைக் காலையிலும், மாலையிலும் ஓதுவது விரும்பத் தக்கதாகும்.

ஓர் அடியான் தனது எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவனாக உள்ளான்.

அத்கார்களை ஓதுவதற்கான மிகச் சிறந்த நேரம், காலையில், பஜ்ர் உதயமாகியது தொடக்கம், சூரியன் உதித்து காலை ஆரம்பிக்கும் நேரம் வரையாகும். மாலையில், அஸ்ர் தொடக்கும் சூரியன் மறைவதற்கு முன்னர் வரையாகும். அதற்குப் பின்னால் அவர் ஓதினால், அதாவது காலையில் ழுஹா நேரம் ஏற்பட்ட பின்னர் ஓதினால் அது நிறைவேறும். ழுஹருக்குப் பின்னால் ஓதினால் அதுவும் நிறைவேறும். மஃரிபுக்குப் பின்னர் ஓதினாலும் நிறைவேறும். அவையும் திக்ர் உடைய நேரங்களே!

'உன்னிடமே ஒன்றுசேர்க்கப்படுவோம்' என்று காலையில் கூறப்படுவது எவ்வாறு பொருத்தமாக உள்ளதென்றால், இது மக்கள் மரணித்த பின்னர் எழுப்பப்படும் நிகழ்வாகிய மீள் எழுப்பல் நிகழ்வை நினைவுபடுத்துகின்றது. ஏனெனில், இது ஒரு புதிய எழுப்பல் ஆகும். உயிர்கள் உடம்பிற்கு மீண்டும் வழங்கப்படும் புதிய ஒரு நாளாகும். மக்கள் இந்நாளில் பரந்து காணப்படுவார்கள். அல்லாஹ் படைத்துள்ள இந்த காலைப்பொழுது மீண்டும் உதித்து, மனிதனுக்கு எதிரான ஒரு சாட்சியாக இருக்கும். அதன் நேரங்களும், பொழுதுகளும் எமது அமல்களுக்கான ஒரு சேமிப்பிடமாக இருக்கும்.

'மீள்வது உன்னிடமே' என்ற வார்த்தை, மாலை நேரத்திற்குப் பொருந்துவதற்கான காரணம், மக்கள் தமது நலன்களுக்காகவும், வாழ்க்கைக்காகவும் பரந்து சென்று தொழில்செய்துவிட்டுத் திரும்பும் போது தமது வீடுகளுக்குத் திரும்புகின்றார்கள். சிதறிய நிலையில் இருந்த அவர்கள் ஓய்வை நோக்கி ஒதுங்குகின்றார்கள். எனவே, ஒதுங்குமிடமாக உள்ள, அல்லாஹ்வை நோக்கி மீள்வது இங்கு நினைவுபடுத்தப்படுகின்றது.

التصنيفات

காலை மாலை திக்ருகள்