((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான்

((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேட்டதாக அம்ர் இப்னு அபஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னிடம் கூறியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : ((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான். இந்நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூருகிற அடியார்களில் நீயும் ஒருவனாக இருக்கமுடியுமென்றிருந்தால் அப்படி இருந்து கொள்வீராக)).

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والترمذي والنسائي]

الشرح

இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் இறைவன் தன் அடியானுக்கு மிக அருகில் வருவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். முஃமினே ! - இந்த நேரத்தில் அல்லாஹ்வைத் தொழுது அவனை நினைவு கூறி அவனிடம் பாவமன்னிப்புத் கோருபவர்களில் ஒருவராக உமக்கு இருக்க முடியுமென்றிருந்தால் அதற்கு எத்தனிப்பீராக. ஏனெனில் இந்நேரத்தை பயன்படுத்தி அதில் நல்லமல்களில் ஈடுபடுவது மிகவும் தேவையான ஒரு விடயமாகும்.

فوائد الحديث

முஸ்லிம்கள் இரவின் இறுதிப் பகுதியில் திக்ர் -அல்லாஹ்வை நினைவு கூற- செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டிருத்தல்.

திக்ர், துஆ மற்றும் தொழுகை ஆகியன அவற்றின் சிறப்புகள் அவை செய்யும் நேரங்களின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

'ஒர் அடியானுக்கு இறைவன் மிக நெருக்கமானவன்' என்ற நபியின் கூற்றுக்கும் 'ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமானவன் அவன் ஸஜ்தா செய்யும் போதுதான்' என்ற கூற்றுக்கும் இடையிலான வித்தியாசம்-வேறுபாடு- பற்றி மைரக் குறிப்பிடுகையில்: இங்கே குறிப்பிடப்பட்ட ஹதீஸானது இறைவன் அடியானுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரத்தை விபரிக்கிறது அது நள்ளிரவாகும். இரண்டாவது ஹதீஸ் அடியான் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலைகளை விபரிப்பதாகும். அவ்வாறான நிலைகளுள் ஸஜ்தாவும் ஒன்றாகும் என்பதே இதன் கருத்தாகும் என்கிறார்.

التصنيفات

துஆ அங்கீகரிக்கப்படுவதற்கான காரணிகளும் தடைகளும்