'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அவை இரண்டுக்கும் ஒன்றை…

'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அவை இரண்டுக்கும் ஒன்றை ஒத்த சமமான வெகுமதி- கூலி- கிடைக்கும். ஒரு நல்ல செயலுக்கு பத்து மடங்கு வெகுமதி-கூலி- கிடைக்கும்,(அதே போன்று) ஒரு நல்ல செயலுக்கு எழுநூறு மடங்கு வெகுமதி கிடைக்கும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக குரைம் இப்னு ஃபாத்திக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிரார்கள்: 'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அவை இரண்டுக்கும் ஒன்றை ஒத்த சமமான வெகுமதி- கூலி- கிடைக்கும். ஒரு நல்ல செயலுக்கு பத்து மடங்கு வெகுமதி-கூலி- கிடைக்கும்,(அதே போன்று) ஒரு நல்ல செயலுக்கு எழுநூறு மடங்கு வெகுமதி கிடைக்கும். உறுதியான இரண்டு விடயங்களைப் பொருத்த வரை அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்தவர் சொர்க்கத்தில் நுழைவார், அல்லாஹ்வுக்கு எதையாவது இணைவைத்து இறந்தவர் நரகத்தில் நுழைவார். ஒரு செயலுக்கு நிகரான வெகுமதி என்பது ஒரு நன்மையான காரியத்தை செய்ய உறுதி கொண்ட விடயத்தை, அவனது மனம் உணர்ந்திருந்திருந்ததை, அல்லாஹ் அறிகிறான் எனில் அது அவனுக்கு நற்செயலாகப் பதிவு செய்யப்படும். ஒருவன் தீய செயலைச் செய்தால், அது அவனுக்கு எதிரான தீய செயலாகப் பதிவு செய்யப்படும். யார் ஒரு நற் செயலைப் புரிகிறாரோ அந்த நற்செயலுக்கு அதைப் போன்ற பத்து மடங்கு கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவரின் ஒரு நற்செயலுக்கு எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும். மனிதர்களைப் பொறுத்தவரை, இவ்வுலக வாழ்வில் செல்வச் செழிப்பில் இருப்போர்; மறுமையில் கஷ்டத்தில் இருப்பார்கள். மறுமையில் செழுமையுடன் இருப்போர் உலக வாழ்வில் நெருக்கடியில் இருப்பர். சிலர் உலக வாழ்விலும் மறுமையிலும் நெருக்கடியில் உள்ளனர்; மேலும் சிலர் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் செல்வச் செழிப்பில் உள்ளனர்.'

[ஹஸனானது-சிறந்தது] [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

الشرح

செயல்கள் ஆறு வகைப்படும்.மனிதர்கள் நான்கு வகையினர் உள்ளனர் என நபியவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகின்றார்கள். ஆறு செயற்பாடுகள் பின்வருமாறு: முதலாவது: யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது மரணித்தால் அவனுக்கு சுவர்க்கம் கிடைக்கும். இரண்டாவது, அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒரு விடயத்தில் இணைவைத்த நிலையில் மரணித்தவருக்கு நிரந்தர நரகம் உண்டு. இவைகள் இரண்டும் சந்தேகமின்றி உறுதியாக மறுமையில் நிகழக்கூடிய விடயங்களாகும். மூன்றாவது : செய்வதற்கு எண்ணிய நல்ல காரியம். யார் ஒரு நல்ல காரியததை செய்ய வேண்டும் என நிய்யத் வைத்து (மனதால் செய்யவேண்டும் என உறுதி கொள்ளல்)அவர் தனது நிய்யத்தில் அவருடைய உள்ளம் நிறைவாக உணரும் அளவுக்கு உண்மையாளராக இருந்ததை அல்லாஹ் அறிகிறான்.இவ்வாறு இருக்கையில் அந்த நல்ல காரியத்தை செய்வதற்கு தடையாக ஏதோ ஒரு விடயம் குறுக்காக அமையுமானால் அதற்கான பூரண கூலியை அல்லாஹ் அவனுக்கு எழுதி விடுகிறான். நான்காவது: செய்து முடிந்த ஒரு தீமை. யார் ஒரு தீமையைச் செய்கிறாரோ அவருக்கு ஒரு தீமை எழுதப்படுகிறது. இந்த இரண்டு விடயங்களும் எந்த அதிகரிப்புமின்றி குறிப்பிட்ட செயலுக்குரிய ஒரே மாதிரியான கூலியைக் குறிக்கிறது. ஐந்தாவது: ஒரு நற்செயலுக்கான கூலி அதைப்போன்று பத்தாக வழங்கப்படுகின்றமை. யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய மனதால் நினைத்து அதனை செய்தும் விடுகிறார். அந்த நற்செயலுக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. ஆறாவது: ஒரு நற்செயலுக்கான கூலி 700 மடங்காக வழங்கப்படுகின்றமை. யார் ஒருவர் இறைவழியில் ஒரு விடயத்தில்; செலவு செய்கிறாரோ அதற்கான கூலி 700 மடங்காக எழுதப்படுகிறது. இது அடியார்கள் மீதான அல்லாஹ்வின் பேரருளும் பேருபகாரமுமாகும். மனிதர்கள் நான்கு வகையினர். அவர்களின் விபரம் பின்வருமாறு : முதலாமவர்: உலகில் வாழ்வாதாரத்தை தாராளமாகப் பெற்றவர் மாத்திரமின்றி அவர் விரும்பிய விதத்தில் அதனை அனுபவித்ததவர்; மறுமையில் பெரும் நெருக்கடிக்குள் இருப்பவர் இவர் இறுதியாக செல்லுமிடம் நரகமாகும் அவர்தான் காபிரான -இறைவனை மறுத்துவாழ்ந்த –செல்வந்தன். இரண்டாமவர் : இவ்வுலக வாழ்வில்; வசதி ஏதுமின்றி மிக வறுமையில் இருந்தவர், என்றாலும் மறுமையில் செல்வச்செழிப்பில் இருப்பவர் இறுதியில் சுவர்க்கம் செல்பவர் அவர்தான் அல்லாஹ்வை நம்பி வாழ்ந்த ஏழை முஃமின். மூன்றாமவர்: இவ்வுலகிலும் மறுமையிலும் நெருக்கடிக்கு உள்ளானவர் அவர்தான் அல்லாஹ்வை நிராகரித்து வாழ்ந்த ஏழை. நான்காமவர் : இவ்வுலகில் மறுமையிலும் செழுமையுடன் இருப்பவர் அவர்தான் அல்லாஹ்வை நம்பி வாழ்ந்த முஃமினான செல்வந்தர்.

فوائد الحديث

அடியார்கள் மீதான அல்லாஹ்வின் பேரருளும்,நன்மைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளமையும்.

அல்லாஹ்வின் நீதியும்,பெருந்தன்மையும்.தீமை விடயத்தில் அதற்கான கூலி ஒன்று என்று நிர்ணயித்துள்ளதன் மூலம் எம்முடன் நீதியாக நடந்து கொள்கிறான்.

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் மிகவும் ஆபத்தான விடயம் என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடுவதுடன், அது -இணைவைத்தலானது- சுவர்க்கம் நுழைய தடையாகவும் அமைந்து விடுகிறது.

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதின் சிறப்பு குறித்து விளக்குதல்.

அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்வதற்கு கிடைக்கும் கூலி இரட்டிப்பாக்கப்படுதல்.அது 700 மடங்கிலிருந்து ஆரம்பிக்கிறது.இவ்வளவு கூலி வழங்கப்படக் காரணம் இறைபாதையில் செலவு செய்வது அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச்செய்ய பேருதவியாக இருப்பதினாலாகும்.

மனிதர்களின் வகையும் அவர்களின் வித்தியாசமும் தெளிவுபடுத்தப்பட்டிருத்தல்.

இவ்வுலகில் முஃமினுக்கும் முஃமினல்லாதவருக்கும் அல்லாஹ் வசதி வாய்ப்புகளை தாராளமாக வழங்குவான். இது மறுமையில் முஃமின்களுக்கு தவிர வேறு யருக்கும் கிடைக்கமாட்டாது.

التصنيفات

ஏகத்துவத்தின் மகிமைகள், உள செயற்பாடுகளின் சிறப்புகள், உடல் செயற்பாடுகளின் சிறப்புகள், உபரியான தர்மம்