'எந்தப் பாவமும் இல்லாத நிலையில் (பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்)அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை, முஃமினான ஆணும்,…

'எந்தப் பாவமும் இல்லாத நிலையில் (பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்)அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை, முஃமினான ஆணும், பெண்ணும் தங்கள் சுய வாழ்விலும், தங்கள் குழந்தைகளிலும், செல்வத்திலும் சோதனைகளை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எந்தப் பாவமும் இல்லாத நிலையில் (பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்)அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை, முஃமினான ஆணும், பெண்ணும் தங்கள் சுய வாழ்விலும், தங்கள் குழந்தைகளிலும், செல்வத்திலும் சோதனைகளை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.'

[ஹஸனானது-சிறந்தது] [رواه الترمذي وأحمد]

الشرح

ஒரு நம்பிக்கை கொண்ட ஆணோ, அல்லது பெண்ணோ சோதனைகளுக்கு ஆட்படாமல் ஒரு போதும் இருக்கமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சோதனையானது ஒரு முஃமினின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகக் காணப்படும். உதாரணமாக அவரது ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சார்ந்ததாக இருக்கும். சில நேரங்களில் சோதனையானது குழந்தைகளுடன் தொடர்புடையதாக காணப்படும், உதாரணமாக பிள்ளைகள் நோய்வாயப்டுதல், இறந்து போதல் அல்லது கீழ்படியாது நடத்தல், நோவினை செய்தல் போன்றவைகளை குறிப்பிடலாம். சில நேரங்களில் சோதனை செல்வத்துடன் தொடர்பானதாக இருக்க முடியும். உதாரணமாக வறுமையை எதிர்கொள்ளுதல், வியாபாரம் முழுமையாக நஷ்டம்அடைதல், செல்வம் திருடப்படுதல், பொருளாதார மந்தநிலை, நெருக்கடியை எதிர்கொள்ளல் போன்றவற்றை குறிப்பிடலாம். இந்த சோதனைகளின் விளைவாக, அல்லாஹ் அடியானின் அனைத்து பாவங்களையும் அழித்து விடுகிறான், இறுதியாக அவன் அல்லாஹ்வைச் சந்திக்கும் போது, அவன் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் அவன் தூய்மையடைகிறான்.

فوائد الحديث

உலகவாழ்வில் ஏற்படுகின்ற சோதனைகள், ஆபத்துக்கள் மூலம் அல்லாஹ் தனது அடியார்களான முஃமின்களின் பாவங்களை மன்னிப்பது அவனின் மிகப் பெரும் கருணையின் வெளிப்பாடாகும்.

ஒருவரிடம் நம்பிக்கை -ஈமான்- இருந்தால் சோதனை அவரது பாவங்களை அழிக்க உதவுகிறது. அத்துடன் ஒரு அடியான் சோதனையின் போது பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் தீர்ப்பால் கோபப்படாமல் இருந்தால், அவருக்கு நிச்சயமாக வெகுமதி கிடைக்கும்.

ஒருவர் தான் விரும்பும், விரும்பாத விடயங்கள் அனைத்திலும் பொறுமைகாக்குமாறு வலியுறுத்தப்பட்டிருத்தல். அல்லாஹ்வின் கடமையான அமல்களைச் செய்வதிலும், அவன் தடை செய்தவற்றைத் தவிர்ப்பதிலும் அடியான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து, அவனுடைய தண்டனையை அஞ்ச வேண்டும்.

' இந்த ஹதீஸில் அல் முஃமின் அல் முஃமினா –அதாவது விசுவாசியான ஆண் மற்றும் பெண் ' என்ற கூற்றில் அல் முஃமினா – முஃமினான பெண் என்று மேலதிகமாக குறிப்பிடப்பட்டிருப்பது பெண்ணின் உரிமையை வலியுறுத்துவதற்காகும். 'அல் முஃமின் என்ற வார்த்தை மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் பெண்ணும் உள்ளடக்கப்படுவார், அத்துடன் 'முஃமின்' என்ற அரபு வார்த்தை ஆண்களை மாத்திம் குறிக்கும் சொல் அல்ல, அது இருபாலாரையும் குறிக்கும் ஒரு பொதுச்சொல்லாகும். ஆகவே, ஒரு பெண்ணுக்கு ஏதேனும் சோதனை ஏற்பட்டாலும் அவளுடைய பாவங்களுக்கும் தவறுகளுக்கும் பரிகாரமாக ஆண்களுக்கு கிடைக்கும் அதே கூலி –வெகுமதி அவளுக்கும் நிச்சயம் கிடைக்கும் என்பதை வலியுறுத்தி குறிப்பிடவே இங்கு அல் முஃமினா என்ற வார்த்தையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது என்பது இதன் கருத்தாகும்.

சோதனையின் விளைவால் கிடைக்கும் வெகுமதி ஒவ்வொரு தடவையும் அடியான் எதிர்கொள்ளும் நோவினைகளயும் வேதனைகளையும் எளிதாக்கி விடுகிறது.

التصنيفات

கழா, கத்ர் மீது விசுவாசம் கொள்ளுதல், உளப்பரிசுத்தம் செய்தல்