உங்களில் ஒருவர் தனது சகோதரனைச் சந்தித்தால் ஸலாம் சொல்லட்டும். அவர்களுக்கு மத்தியில், ஒரு மரமோ, சுவரோ, கல்லோ…

உங்களில் ஒருவர் தனது சகோதரனைச் சந்தித்தால் ஸலாம் சொல்லட்டும். அவர்களுக்கு மத்தியில், ஒரு மரமோ, சுவரோ, கல்லோ பிரித்து, பின்னர் சந்தித்தாலும் ஸலாம் சொல்லட்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் தனது சகோதரனைச் சந்தித்தால் ஸலாம் சொல்லட்டும். அவர்களுக்கு மத்தியில், ஒரு மரமோ, சுவரோ, கல்லோ பிரித்து, பின்னர் சந்தித்தாலும் ஸலாம் சொல்லட்டும்.

[ஸஹீஹானது-சரியானது] [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறுமாறு நபியவர்கள் வலியுறுத்துகின்றார்கள். எந்தளவுக்கென்றால், அவர் ஒன்றாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கிடையில் மரம், அல்லது சுவர் அல்லது பெரிய கல் போன்ற ஏதாவதொன்று பிரித்து, பின்னர் சந்தித்தாலும் மீண்டுமொரு தடவை ஸலாம் சொல்லட்டும் என்று கூறுகின்றார்கள்.

فوائد الحديث

ஸலாமைப் பரப்புவதும், நிலமைகள் மாற்றமடையும் போதும் அதை மீண்டும் கூறுவதும் நல்லதாகும்.

ஸலாம், முஸ்லிம்கள் மத்தியில் அன்பையும், நெருக்கத்தையும் ஏற்படுத்துவதால், அந்த ஸுன்னாவைப் பரப்பவும், அதை அதிகம் செய்யவும் நபியவர்கள் ஆர்வம் காட்டியுள்ளமை.

ஸலாம் என்பது, 'அஸ்ஸலாமு அலைகும்' அல்லது, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு' என்று கூறுவதாகும். முதல் தடவை சந்திக்கும் போது கைலாகு செய்துகொள்வது ஸலாம் அல்ல.

ஸலாம் என்பது துஆவாகும். முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் துஆச் செய்ய எவ்வளவு தேவையுடன் உள்ளனர்! அது பன்மடங்காக இருப்பினும் சரியே!

التصنيفات

ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்