(தீய சகுணம்) பறவை சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், என மூன்று தடைவகள்…

(தீய சகுணம்) பறவை சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், என மூன்று தடைவகள் கூறினார்கள். எங்களில் இது குறித்த எண்ணம் உடையவர் எவரும் இல்லாமல் இல்லை. எனறாலும்; இதனை அல்லாஹ் தவக்குளின் மூலம் அகற்றி விடுகிறான்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கிறார்கள்: (தீய சகுணம்) பறவை சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், என மூன்று தடைவகள் கூறினார்கள். எங்களில் இது குறித்த எண்ணம் உடையவர் எவரும் இல்லாமல் இல்லை. எனறாலும்; இதனை அல்லாஹ் தவக்குளின் மூலம் அகற்றி விடுகிறான்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீய சகுணம் பார்ப்பதை எச்சரித்துள்ளார்கள். தீய சகுணம் என்பது பறவைகள், விலங்குகள், மாற்றுத் திறனாளிகள், எண்கள், நாட்கள், அல்லது வேறு எதையும் கேட்கக்கூடிய அல்லது காணக் கூடிய எதிலும் துற்சகுணம் கொள்ளுதல் - இங்கே பறவைச் சகுணம் பற்றி குறிப்பிட்டிருப்பது அஞ்ஞானக் காலமாகிய ஜாஹிலிய்யாக் காலத்தில் பிரபல்யமாயிருந்ததினாலாகும். இப்பெயர் கொண்டு அழைக்கப்பட இதற்கென ஒரு அடிப்படை உண்டு அக்காலத்தில் ஒரு வேலை நிமித்தம் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்க அல்லது வியாபாரத்தில் வெளிக்கிளம்பிச் செல்வது போன்ற விடயங்களை துவங்கும் போது பறவையை பறக்க விடுவார்கள் அது வலது பக்கமாக பறந்து சென்றால் நற்சகுணமாக கருதி அவர் விரும்பிய காரியத்தில் ஈடுபடுவார். அப்பறவை இடப்பக்கமாக பறந்தால் அது துற்சகுணமகாக் கருத்திற்கு கொண்டு அவர் ஈடுபடப்போகும் காரியத்தை தவிர்த்துக்கொள்வார். இதுவே அக்கால நடைமுறையாகக் காணப்பட்டது. சகுணம் பார்த்தல் இணைவைப்பாகும் காரணம் நன்மையொன்றை ஏற்படுத்துவதும் தீங்கொன்றை தடுப்பதும் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையும் கிடையாது. சகுணம் போன்ற விடயங்கள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் சில வேளை ஏற்படலாம், அதனை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அல்லாஹ்வின் மீது தவக்குள் (முழுமையாக அல்லாஹ்வை சார்ந்திருத்தல்) வைப்பதன் மூலமே தடுத்திட முடியும் என இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

சகுணம் பார்த்தல் அல்லாஹ் அல்லாத ஒன்றில் உள்ளம் தங்கியிருப்பதால் அது இணைவைத்தலாகும்.

முக்கிய மார்க்கப் பிரச்சினைகள் தொடர்பாக பல தடவைகள் குறிப்பிடுதலின் அவசியம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை. அவ்வாறு பல தடவைகள் குறிப்பிடுவதன் விளைவாக உள்ளத்தில் ஆழமாகப் பதிவதுடன் மனதில் நிரந்தராமாக இருக்கும்.

அல்லாஹ்வின் மீது தவக்குள் (முழுமையாக அல்லாஹ்வை சார்ந்திருத்தல்) வைப்பதன் மூலம் சகுணத்தை போக்கிவிட முடியும்.

அல்லாஹ்வின் மீது மாத்திரம் தவக்குள் -நம்பிக்கை - வைக்க வேண்டும்- எனவும் உள்ளம் அவனுடன் இணைந்திருக்க வேண்டும் எனவும் இந்த ஹதீஸ் வலியுறுத்தியிருத்தல்.

التصنيفات

இணைவைப்பு, உள செயற்பாடுகளின் சிறப்புகள்