யூத, கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் முந்திக்கொண்டு ஸலாம் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரைப் பாதையில் கண்டால்,…

யூத, கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் முந்திக்கொண்டு ஸலாம் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரைப் பாதையில் கண்டால், நெருக்கடியான ஒரு பகுதிக்குச் செல்ல அவர்களை நிர்ப்பந்தியுங்கள்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: யூத, கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் முந்திக்கொண்டு ஸலாம் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரைப் பாதையில் கண்டால், நெருக்கடியான ஒரு பகுதிக்குச் செல்ல அவர்களை நிர்ப்பந்தியுங்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இறைநிராகரிப்பாளர்கள் ஒரு புறம் இருக்க, யூத, கிறிஸ்தவர்கள் - திம்மிகளாக இருந்தாலும் - அவர்களுக்கு நாமாக முந்திக்கொண்டு ஸலாம் சொல்வதை நபியவர்கள் தடுக்கின்றார்கள். மேலும், அவர்களில் ஒருவரை நாம் பாதையில் கண்டால், பாதையின் ஓரத்திற்கு அவரைத் தள்ளிவிடுமாறும் அறிவுறுத்துகின்றார்கள். பாதையின் மத்தியில் நடந்துசெல்லவேண்டியவன் ஒரு முஃமின் மாத்திரமே! ஒதுங்கிப் போக வேண்டியவன் நிராகரிப்பாளனே! எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் தாழ்ந்தவனாக இருக்கக் கூடாது.

فوائد الحديث

எந்த ஒரு முஸ்லிமும், முந்திக்கொண்டு யூத, கிறிஸ்தவர்களில் யாருக்கும் ஸலாம் கூறுவது கூடாது.

அவர்கள் முதலில் ஸலாம் கூறினால், 'வஅலைகும்' என்று மாத்திரம் கூறலாம்.

ஒரு முஸ்லிம் நியாயமான காரணமின்றி, வேண்டுமென்றே ஒரு காபிருக்கு நோவினை செய்யும் நோக்கில், பாதையில் அவனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது. ஆனால், பாதை ஒடுங்கியதாகவோ, சனநெரிசலானதாகவோ இருந்தால், அதில் செல்வதற்கு முஸ்லிமே தகுதியானவன். காபிர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் கண்ணியத்தை வெளிக் காட்டுவதோடு, அநீதமிழைக்காமலும், கீழ்த்தரமான வார்த்தைகள் பேசாமலும், முஸ்லிம் அல்லாதோரின் இழிந்த நிலையை வெளிக்காட்டல்.

காபிர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதென்பது, அவர்களிடம் உள்ள இறைநிராகரிப்பின் காரணமாகத்தான். குறிப்பாக, அச்செயல் அவர்களை அதற்குரிய காரணத்தை அறியத் தூண்டினால் சிலவேளை அவர்கள் இஸ்லாத்தை ஏற்று, நரகில் இருந்து தப்புவதற்கு அது காரணமாக அமையலாம்.

தேவையேற்படும் போது ஒரு முஸ்லிம் காபிரிடம், 'நீங்கள் எவ்வாறு உள்ளீர்கள்? உங்கள் காலைப்பொழுது எவ்வாறு உள்ளது? உங்கள் மாலைப்பொழுது எவ்வாறுள்ளது?' போன்ற விதத்தில் முந்திக்கொண்டு விசாரிக்கலாம். இங்கு தடுக்கப்பட்டுள்ளது ஸலாம் கூறுவது மாத்திரமே.

தீபீ அவர்கள் கூறுகின்றார்கள் : ஒரு பித்அத்வாதிக்கும் முந்திக்கொண்டு ஸலாம் கூறக்கூடாது என்பதுவே ஏற்றமான கருத்தாகும். ஒருவேளை ஒரு முஸ்லிம், அறிமுகமற்ற ஒருவருக்கு ஸலாம் கூறி, பின்னர் அவர் ஒரு திம்மி என்றோ, பித்அத்வாதி என்றோ தெரியவந்தால், அவரை தாழ்த்தும் நோக்கில், 'எனது ஸலாமை வாபஸ் வாங்கிக்கொள்கின்றேன்.' என்று கூறுவார்.

التصنيفات

ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்