எனது பெயர் ஒருவனிடம் கூறப்பட்டும், என் மீது ஸலவாத் சொல்லாமல் இருப்பவனே, உண்மையில் கஞ்சனாகும்

எனது பெயர் ஒருவனிடம் கூறப்பட்டும், என் மீது ஸலவாத் சொல்லாமல் இருப்பவனே, உண்மையில் கஞ்சனாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனது பெயர் ஒருவனிடம் கூறப்பட்டும், என் மீது ஸலவாத் சொல்லாமல் இருப்பவனே, உண்மையில் கஞ்சனாகும்.

[ஸஹீஹானது-சரியானது] [رواه الترمذي والنسائي في الكبرى وأحمد]

الشرح

நபியவர்கள், தமது பெயரையோ, புனைப்பெயரையோ, வர்ணனையையோ கேட்டும் ஸலவாத் சொல்லாமல் இருப்பதை எச்சரிக்கும் விதமாக, 'முழுமையான கஞ்சன் யாரென்றால், எனது பெயர் நினைவுபடுத்தப்பட்டும் ஸலவாத் கூறாதவனே' என்று கூறுகின்றார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு: முதலாவது, இது அற்பத்தில் கஞ்சத்தனம் காட்டுவதாகும். இதனால் அவருக்கு குறைவாகவோ, கூடுதலாகவோ நட்டம் ஏற்படுவதில்லை. இதற்கு அவர் பணத்தையோ, முயற்சியையோ செலவளிக்கவேண்டியதில்லை. இரண்டாவது, இவர் தனக்குத் தானே கஞ்சத்தனப்பட்டுக்கொண்டு, நபியவர்களுக்கு ஸலவாத் சொல்வதால் கிடைக்கும் நன்மைகளைத் தவறவிடுகின்றார். ஏனெனில், இவர் ஸலவாத் சொல்லாமல் இருப்பதால், நபியவர்களின் ஏவலின் பிரகாரம் தன் மீது கடமையாகியுள்ள, தனக்கு நன்மைகளைப் பெற்றுத் தரும் ஒரு கடமையை நிறைவேற்றாமல் கஞ்சத்தனம் காட்டுகின்றார். மூன்றாவது, நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வதன் மூலம், அவர்களுக்கு நிறைவேற்றவேண்டிய சில கடமைகள் நிறைவேற்றப்படுகின்றது. ஏனெனில், அவர்களே எமக்கக் கற்றுத் தந்தவர்கள், அவர்களே எமக்கு வழிகாட்டியவர்கள். அவர்களே எம்மை அல்லாஹ்வை நோக்கி அழைத்தவர்கள். இந்த வஹியையும், இந்த ஷரீஆவையும் கொண்டு வந்தவர்கள் அவரே! அல்லாஹ்வுக்கு அடுத்ததாக, எமக்கு நேர்வழி கிடைக்க அவர்கள் தாம் காரணமாக இருந்துள்ளார்கள். எனவே, நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லாதவன், தனக்குத் தானே கஞ்சத்தனம் காட்டிக்கொள்வது மாத்திரமால்லாமல், நபியவர்களுக்குச் செய்ய வேண்டிய மிகச் சிறிய ஒரு கடமையை நிறைவேற்றாதும் கஞ்சத்தனம் காட்டுகின்றான்.

فوائد الحديث

நபி (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் கூறாமல் இருப்பது தான் கஞ்சத்தனத்தின் மிகப் பிரதானமான அடையாளமாகும்.

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதென்பது, எல்லா நேரங்களிலும் செய்யப்படவேண்டிய, மிகச் சிறந்த ஒரு வணக்கமாக உள்ள அதேவேளை, அவர்களது பெயர் கூறப்படும் போதும் மேலும் உறுதியான வணக்கமாக மாறுகின்றது.

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : ஒருவர் நபியவர்கள் மீது ஸலவாத் கூறும் போது, ஸலவாத், ஸலாம் ஆகிய இரண்டடையும் சேர்த்துக் கூறட்டும். 'அல்லாஹ் அவர் மீது ஸலவாத் கூறட்டும்' என்று மாத்திரமோ, 'அவர் மீது ஸலாம் உண்டாகட்டும்' என்று மாத்திரமோ கூறவேண்டாம்.

'நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குகளும் நபியவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர்' என்ற வசனத்தை விளக்கும் போது அபுல் ஆலியா அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : 'அல்லாஹ் நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வதென்பது, அவர்களைப் புகழ்வதாகும். மலக்குமார்களும், மனிதர்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதென்பது, துஆக் கேட்பதாகும்.'

ஹுலைமீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்' என்பதன் அர்த்தமாவது, 'யா அல்லாஹ்! இவ்வுலகில், நபியவர்களை, அவர்களது புகழை உயர்த்தியும், அவர்களது மார்க்கத்தை மேலோங்கச் செய்தும், அவர்களது சரீஆவை நிலைபெறச் செய்தும் மகிமைப்படுத்துவாயாக! மறுமையில், உம்மத்திற்காக அவர்கள் செய்யும் சபாஅத்தை ஏற்றும், அவர்களது கூலியை முழுமையாக வழங்கியும், அல்மகாமுல் மஹ்மூதின் மூலம் அவர்களது சிறப்பை முன்சென்றோருக்கும், பின்வந்தோருக்கும் எடுத்துக் காட்டியும், இறைநெருக்கமுடைய சாட்சியாளர்கள் அனைவரையும் விட அவர்களை முற்படுத்தியும் மகிமைப்படுத்துவாயாக!

التصنيفات

அவ்வப்போது நிகழும் நிகழ்வுகளுக்கான திக்ருகள்