அவ்வப்போது நிகழும் நிகழ்வுகளுக்கான திக்ருகள்

அவ்வப்போது நிகழும் நிகழ்வுகளுக்கான திக்ருகள்

1- 'யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் தங்குவதற்காக இறங்கி பின்னர் 'அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' (பொருள் : அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்துப் படைப்புகளின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூறிப் பிரார்த்தித்தால், தங்கிய அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது'

4- உணவை சாப்பிடும் ஒருவர் (அவர் சாப்பிட்டதன் பின்) 'அல்ஹம்து லில்லாஹில்லதி அத்அமனி ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வா என்று கூறுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்' (திக்ரின் கருத்து ) எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எந்தவித சக்தியும் முயற்சியுமின்றியே எனக்கு இதனை அருளினான்;)

5- 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்

7- நீங்கள் காற்றை தூற்றாதீர்கள். அவ்வாறு நீங்கள் அதில் விரும்பாதவற்றை கண்டால் ' அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக்க மின் கைரி ஹாதிஹிர் ரீஹி வகைர மாபீஹா வகைர மா உமிரத் பிஹி. வஅவூது பிக மின் ஷர்ரி ஹதிஹிர்ரீஹீ வஷர்ரி மா பீஹா வஷர்ரி மா உமிரத் பிஹி பிஹி 'என்று கூறுங்கள். பொருள் : யாஅல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையையும், அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் இது எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறோம். இதன் தீங்கை விட்டும், அது மறைத்து வைத்துள்ள தீங்கைவிட்டும் அது எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்'

8- ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால்.(அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமழான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால். (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும்.}