إعدادات العرض
‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்,…
‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்”
ஸுலைமான் பின் ஸுரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Türkçe اردو 中文 हिन्दी Tagalog Kurdî Kiswahili Português සිංහල Русский Nederlands Tiếng Việt অসমীয়া ગુજરાતી پښتو Hausa മലയാളം नेपाली ქართული Magyar తెలుగు Македонски Svenska ಕನ್ನಡ Moore Română Українська ไทย मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Wolof ភាសាខ្មែរ Malagasy Yorùbá Српски Lietuvių Kinyarwanda Shqipالشرح
நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் இரு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டார்கள். ஒருவரது முகம் சிவந்து போயிருந்தது, அவரது கழுத்தைச் சூழாக உள்ள நரம்புகள் புடைத்துப் போயிருந்தன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனக்கு ஒரு வார்த்தை தெரியும். அதை இவர் கூறினால், இவரை விட்டும் கோபம் அகன்று விடும். 'எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்று இவர் கூறுவது நல்லது.' அப்போது நபித் தோழர்கள் அம்மனிதனிடம், ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு நபியவர்கள் ஏவுகின்றார்கள் எனக் கூறினார்கள். அப்போது, 'நான் பைத்தியக் காரனா?' எனக் கேட்டார் அம்மனிதர். பைத்தியம் உள்ளவர்கள் தான் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடவேண்டும் என நினைத்துவிட்டார் போலும்.فوائد الحديث
தேவையேற்படும் சந்தர்ப்ங்களில் வழிகாட்டல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்குவதில் நபியவர்கள் ஆர்வமாக இருந்துள்ளமை.
கோபம் ஷைத்தானிடம் இருந்து வரும் ஒன்றாகும்.
கோபத்தின் போது, எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு ஏவப்பட்டுள்ளமை. "ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! " (அல்குர்ஆன்)
ஏசுதல் மற்றும் அதுபோன்ற சாபமிடல் போன்றவற்றை விட்டும் எச்சரித்தலும், கண்டித்தலும். ஏனெனில், அவை மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.
உபதேசம் ஒருவரது காதில் விழாத போது, அவர் பயனடையும் நோக்கில் அதை அவருக்கக் கூறுவது.
நபி (ஸல்) அவர்கள் கோபத்தை விட்டும் எச்சரித்துள்ளார்கள். ஏனெனில் அபாயங்களுக்கும், தீங்குகளுக்கும் அது காரணமாக அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் எல்லைகள் மீறப்பட்டாலே ஒழிய கோபப்படமாட்டார்கள். இது வரவேற்கப்படும் கோபமாகும்.
‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்ற வார்த்தை பற்றி இமாம் நவவி கூறும் போது, இவ்வாறு கூறியவர் நயவஞ்சகரில் ஒருவராகவோ, அல்லது கடுகடுப்பான கிராமப்புற அரபிகளில் ஒருவராகவே இருப்பார் போலும்' என்று கூறினார்கள்.
